முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.