எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மஹியங்கனையில் சிங்கள ஆசிரியையினால் எழுதப்பட்ட தமிழ்நூல் வெளியீடு

மஹியங்கனை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியை விமலா கொடிஆரச்சி எழுதிய இரண்டு தமிழ்ப் புத்தகங்களின் (கைநூல்) வெளியீட்டு விழா அண்மையில் மஹியங்கனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வெளியீட்டு விழா நிகழ்வில் நூலாசிரியர் விமலா கொடிஆரச்சி பேசுகையில்: ‘நான் சிங்கள மொழிமூலம் கற்றேனாயினும் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றுதல் மற்றும் ஆற்றல் காரணமாக இக்கைநூலை எழுதக் கிடைத்தது. இந்நூல் சிங்கள மொழி மூலக் கல்வி பயிலும் மாணவர்களின் தேவையில் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘6ம், 7ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கைநூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நன்கு பிரயோசனப்படக் கூடியவையாகும். மஹியங்கனை ஜீ.எம். நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் இப்புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களில் 30 ஆயிரம் பேர் மன்னாருக்கு அனுப்பப்படுவர்

Wanni_War_Boat_Refugeesவன்னி யிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் முப்பதாயிரம் பேரை மன்னாருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளனர்.

இவர்களை தங்கவைத்து பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சுமார் 30,000 பேரை மன்னாருக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் இவர்களைத் தங்க வைக்க 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு இவர்கள் அனுப்பப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி, தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் தீவுக்குள் உள்ள 20 பாடசாலைகளில் மக்களை தங்கவைக்க வசதிகள் உள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தேசநிர்மாணத்துறை அமைச்சர் எவ்.எம்.சந்திரசேனா, வடமாகாண ஆளுநர், வவுனியா மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓமந்தைக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை முதல் இடம்பெயர்ந்த மக்களை பஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.

இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.

இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்தேவி சேவை வவுனியா வரையுமே

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் வவுனியா வரையுமே தற்போது நடைபெறுகிறது. வியாழக்கிழமையில் இருந்து யாழ்தேவி ரயில் வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரையும் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் வவுனியாவுக்கு அப்பால் இச்சேவையை நீடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையமும் ரயில் பாதையும் புனரமைக்கப்பட்டது.

யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி நடத்துவதற்கு தொடர்பான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடபகுதி நோக்கிய ரயில் சேவையின் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 100 கைதிகள் இடமாற்றம்

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சுமார் 100 கைதிகள் நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணைகளை அடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் ஆண், பெண் கைதி மற்றும் விளக்கமறியல் கைதிகள் 1600 பேரும், 162 காவலர்களும் உள்ளனர். இக் கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நீதிவான் அநுர செனவிரத்ன மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச சமூகம் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: யாழ் பல்கலைக்கழக ஒன்றியம்

civiling_flee_vanni_02.pngதமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுத்த பிரதேசத்தில் அழிவு, மறுபக்கத்தில் அகதி முகாம்களில் வாடிய வாழ்க்கை, இந்த நிலையில் உள்ள மக்களைக் காப்பாற்றி, நிரந்தரமான அமைதிக்கும், இயல்பான ஒரு வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இனவாத போக்கைக் கண்டித்து, போருக்கு முடிவு கட்ட சர்வதேசம் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் போர் வலயத்திற்குள் பலியாகியிருந்தும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பது பெரும் வேதனையளிப்பதாக இருக்கின்றது என கவலை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வன்னிமக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களினால் தமது மாணவர்கள் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேல் மாகாணசபைக்கான தேர்தல் இன்றாகும். தேர்தலில் 60% வாக்குப்பதிவு – முஹம்மட் அமீன்.

election.jpgஇன்று சனிக்கிழமை மேல்மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4.00மணிவரை நடைபெறும். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 2769 வாக்குச் சாவடிகளிலும் இவ்வாக்கெடுப்பு நடைபெறுகின்றன.

மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் 2378 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கொழும்பு,கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள 38 இலட்சத்து 20 ஆயிரத்து 214 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் இன்றைய தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக 17,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 12,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப் படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மாகாணசபைகளுள் மக்கள் தொகை கூடிய மாகாணசபையும், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரித்த மாகாணசபையும் மேல்மாகாண சபையாகும்.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால்,  இன்று தேர்தல் நடைபெறும் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தேர்தலின் போது குறிப்பாக வாக்குச் சாவடியினுள் புகைப்படம் பிடிப்பதற்கோ செய்திகள் சேகரிப்பதற்கோ எந்தவொரு ஊடகத்திற்கும் அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இரு தடவைகள் அல்லது பல தடவைகள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

இன்று இரவு எட்டு மணிக்குப் பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படுவதுடன், நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் தம்மை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் எனவும், குழப்பம் விளைவிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த வடமேல் மாகாண தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தின் நாயக்கர் சேனை வாக்குச் சாவடியின் வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

மேல்மாகாண தேர்தல் தொடர்பான செய்திகள் தேசம்நெற் வாசகர்களுக்காக உடனுக்குடன் திரட்டித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் புதிய நிலவரங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்தும் இதே தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு வரும்.

இணைப்பு -01

தேர்தல் ஆரம்பமாகி நான்கு மணி நேரம் முடிவடையும் நிலையில் கொழும்பு கம்பஹா தேர்தல் மாவட்டங்களில் சுமுகமாக வாக்களிப்பு நடைபெறுவதாக தேசம் நெட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமானோரும், கம்பஹா மாவட்டத்தில் 25 வீதமானோரும் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னைய தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு மந்தமாக இடம்பெறுவதையே அவதானிக்க முடிந்தது.

களுத்துறை மாவட்டத்தில் சில வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் சராசரி வாக்களிப்பு வீதம் 20க்கும் குறைவு என களுத்துறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு -02

மேல்மாகாண சபைத் தேர்தலில் 55 தொடக்கம் 60 சத வீதம் வரையான வாக்குப் பதிவு

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (25) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அது முடிவடைந்த நேரமான மாலை 4.00 மணிவரையான காலப் பகுதிக்குள் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லையென தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று நடைபெற்ற மேல்மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு 55 தொடக்கம் 60 வீதமாகக் காணப்பட்டதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மூல முடிவுகளை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அறிவிக்கக் கூடியதாகவிருப்பதுடன். ஏனைய முடிவுகளை நாளை (26) அதிகாலையில் 3.00 மணியிலிருந்து வெளியிட முடியுமெனவும் தேர்தல்கள்; திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது.

பெப்ரல் அமைப்பு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 53 சதவீதமான வாக்குகளும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் 60 சத வீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கபே) இன்றைய தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 49 சிறு,சிறு சம்பவங்கள் இடம்பெறிருந்தாலும் அமைதியானதாகவும் உற்சாகமானதாகவும் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

இணைப்பு -03

மேல் மாகாண சபை தேர்தலில் 60% வாக்குப்பதிவு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

germany.jpgஇலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.

மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரபாகரன் கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக ‘சப்மறின்’ மூலம் தப்பி ஓடலாம் : கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா

brig_shavendra.jpg
கிளிநொச்சிக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த தயா மாஸ்ரர் தெரிவித்த தகவல்களின் அடைப்படையில் தான் இந்தக் கருத்தை தெரிவிப்பதாக 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு கூறியுள்ளார். வெள்ளாம் முள்ளி வாய்க்கால் பகுதியில்  சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், சூசை ஆகியோரோடு தங்கியிருக்கும் பிரபாகரன் இறுதி நேரத்தில் தப்பிச் செல்லும் நோக்கத்தோடு கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக `சப்மறின்` வைத்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் முரளிதரன் சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக நியமனம்

karuna_amman.jpgதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெற்ற போது விநாயகமூர்த்தி முரளிதரனை உப தலைவர்களில் ஒருவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சி யாப்பின்படி 5 உப தலைவர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.