![]()
கிளிநொச்சிக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும்.
அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த தயா மாஸ்ரர் தெரிவித்த தகவல்களின் அடைப்படையில் தான் இந்தக் கருத்தை தெரிவிப்பதாக 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு கூறியுள்ளார். வெள்ளாம் முள்ளி வாய்க்கால் பகுதியில் சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், சூசை ஆகியோரோடு தங்கியிருக்கும் பிரபாகரன் இறுதி நேரத்தில் தப்பிச் செல்லும் நோக்கத்தோடு கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக `சப்மறின்` வைத்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.