எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது அத்தியாவசியம் : நியூயோர்க்கில் ஜோன் ஹோம்ஸ்

UN_Logoமோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் மாத்திரமன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்கு இல்லை. அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினர் எல்ரிரிஈயினரின் கடைசி பகுதியை அண்மித்துள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

navy.jpgஇரட்டை வாய்கல் தெற்கு பகுதியில் 7 சதுரக்க கி.மீ.பரப்புக்குள் எல்ரிரிஈயினரை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈயினர் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளதாகவும் எல்ரிரிஈயினர் கடைசி சண்டைக்கு எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

58வது டிவிசன் படையினருக்கு பக்கமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் முள்ளிவாய்கல் மேற்கு பகுதியில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 15,000 -20,000 வரையான சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரையமுள்ளிவாய்கல் பகுதியில் கண்ணிவெடிகளையும் அகற்றிக்கொன்டு பயங்கரவாதிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் நுளைந்துள்ளனர்.இதன்போது 15 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

ஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் – அநுர பிரியதர்ஷன

anura_priyadarshana_yapa.jpgஇலங்கையில் தனி ஈழம் அமைத்துத் தருவேன் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி  ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தகுந்த பதிலளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், எந்தவொரு நபருக்கும் வேறு ஒரு நாட்டைத் துண்டாட உதவியளிப்பதாகக் கூறமுடியாது. இந்தியவைத் துண்டாட வெளிநாட்டவர் ஒருவர் உதவுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா? என்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே கேள்வியும் அவர்களுடையதே. பதிலும் அவர்களுடையதே. இதில் தலையிடவேண்டிய அவசியம் எமக்கில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மோதிக் கொள்கின்றனர். இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால  வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

“நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால்,  இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக வாக்களப் பெருமக்களைக் கவரும் விதத்தில் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை

keheliya_rambukwella.jpgவெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்பரி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தொடர்பான தேசியக்கொள்கை ஒன்று குறித்து விளக்கமளிக்கவும் வெளிநாட்டுச் செலாவணி மற்றும் மாற்று வழிகளில் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு அளிக்கின்ற பங்களிப்பை வரவேற்பதும் இதன் நோக்கமாகும்.

107 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்தது

india.jpgபதினொரு மாநிலங்களில் உள்ள 107 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தில் 26 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 16, உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்காளத்தில் 14, பிகாரில் 11, கர்நாடகத்தில் 11, மகாராஷ்டிரத்தில் 10, காஷ்மீர், சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 107 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்தத் தேர்தல் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 1,65,112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிகார், மேற்கு வங்கத் தொகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர். இன்று தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக தலைவர் அத்வானி போட்டியிடும் காந்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம்.

அதேபோல முன்னாள் பிரதமர் தேவ கெளடா போட்டியிடும் ஹாசன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடும் மாதேபுரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா போட்டியிடும் ஷிமோகா ஆகிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது. மும்பையின் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.

இன்றைய வாக்குப் பதிவுடன் நாட்டில் மொத்தமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 171 தொகுதிகளில்  4-வது கட்டமாக வரும் மே 7ம் தேதி 85 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. 5வது கட்டமாக 13ம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 86 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

நுவரெலியா கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மலையக இடதுசாரிகளின் மே தின விழா

may-day.jpgமலையக சோசலிச சக்திகளினதும் இடது சாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் மேதின விழா மே முதலாந் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இடதுசாரிகளின் இம் மேதின விழாவிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி தோழர் ஏ.பி.கணபதிப்பிள்ளை தலைமை வகிப்பார். இவ்விழாவில் செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா, ஐக்கிய தொழிலாளர் சங்க நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜோதிவேல், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம், மகளிர் அமைப்புத் தலைவி மேனகா கந்தசாமி சத்தியம், ஆசிரியர் கலாபூஷணம் இல நாகலிங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஜீ.வி.டி.திலகசிரி, ஐக்கிய சேவையாளர் சங்க பிரதேச தலைவர் கே.நவரட்ணம் கலைமணி பசறையூர் க.வேலாயுதம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

நிவாரண உதவிகளை வவுனியாவுக்கு எடுத்துச் செல்ல விசேட விமான சேவை

fily-ap.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தோருக்கு விநியோகிப்பதற்காக தெற்கில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் வவுனியா செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கை விமானப் படையின் சரக்கு விமானங்கள் பல இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலருணவுப் பொருட்கள்,  மருந்து வகைகள்,  குடிநீர்,  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இவ்வாறு விமானம் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgஊவா மற்றும் தென் மாகாண சபைகளின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ளதாகவும் அவ்வாறு முடிவுற்றவுடன் அவற்றுக்கான தேர்தலை உடன் நடத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கிலும் மாகாணசபைத் தேர்தல் மட்டுமன்றி ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை ஏற்படும் நிலை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் நடந்து முடிந்த தேர்தல்களில் அரசாங்கம் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோன்று எதிர்வரும் தேர்தல்களிலும் அரசாங்கம் மகத்தான வெற்றியீட்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

காணமல் போன மாணவியை விடுவிக்க கோரி இன்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

thinu.jpgமட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆம் வகுப்பு மாணவியான சதீஸ்குமார் தினுஸிக்கா (வயது 8 ) என்ற மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்கு சென்றிருந்தவேளை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.

இம்மாணவி பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார் என்பதை பொலிசார் பாடசாலை வரவு இடாப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். பாடசாலை முன்பாகக் கூடிய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவி காணாமல் போயுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு அண்மித்த வீதிகள் வழியாக இன்று பேரணியொன்றையும் நடத்தினர்.

காணமல் போன மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து தங்களால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து வந்த படகு கடலில் மூழ்கி 9 தமிழர்கள் பலி

boat.jpgபோர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.