போர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.