எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியாவில் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 இளைஞர்கள்

ltte_.jpgவவுனியாவில் இயங்கும் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்து சரணடைந்தவர்களே இங்கு தங்கவைக்கப்பட்டிருப்பதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி படைத் தரப்பு கூறுகையில்; படையினரிடம் சரணடைந்தவர்களுக்குரிய புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில் இயங்க ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சின் கீழ் இந்த நிலையம் இயங்குகிறது.

வவுனியா மன்னார் வீதியிலுள்ள நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியே புனர்வாழ்வு நிலையமாக இயங்குகின்றது. வவுனியாவில் படையினரிடம் சரணடைந்த 800 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து மக்களுடன் இடம்பெயர்ந்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கவே இந்த நிலையம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சரணடைந்த பலர் வெலிக்கந்த நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொழில் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இவர்களில் பெண்களும் உள்ளனர்.

அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) – புன்னியாமீன்

international-firefighters-day.jpgஇன்று மே மாதம் 04ஆம் திகதி. ஆண்டு தோறும் மே 4ஆம் திகதியன்று  அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்  International Firefighters’ Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது. ஆனால்,  இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும்ää அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.

இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும்,  அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும்,  தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது,  சமூகத்தையும்,  சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும்,  சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.

வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. 

தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளன

samthan-2.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளன.  இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய மனிதாபிமான சேவைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.  இதற்கிடையில் இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான முன்னெடுப்புகள் குறித்து, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கிடக்கட்டும்;அவசரமாக இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும்: அத்வானி

india.jpgபா. ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’மற்றவர்கள் நம்மை விமர்சித்தாலும் பா.ஜனதா எப்போதுமே அணுகுண்டு தயாரிப்பதை ஆதரித்து வந்திருக்கிறது.

1961, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். இதே போன்ற நிலையில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியாவிடம் கட்டாயம் அணுகுண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் 1952-ம் ஆண்டு இந்திய- சீனப் போரின்போது ஏற்பட்ட தோல்வி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அணுகுண்டு தொடர்பாக 1964-ம் ஆண்டு பாரதீய ஜனசங்கம் வாரணாசியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா கோபமாக இருப்பதாக நம்மை விமர்சனம் செய்தார்கள்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த சில நாட்களில் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். அமெரிக்கா என்ன நினைக்குமோ என்ற சிந்தனை இதில் தவிர்க்கப்படவேண்டும்’’ என்று கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு?

mahinda-samarasinha.jpgஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப் பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித் திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றிருப்பதாகவும், ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப் படுமெனவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்

பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல் – படைத்தரப்பு மறுப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நேற்று (02.05.2009) காலை செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு தரப்பினர் முற்றாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி தாம் வான் தாக்குதல்களையும், கனரக ஆயுத பாவனையையும் மேற்கொள்வதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

27-karuna-fast.jpgகடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 85 வயதாகும் முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து கொண்டு நலம் பெற்றார். முழு அளவில் அவரது உடல் நலம் சரியாகாவிட்டாலும் கூட அவர் தேர்தல் பிரசாரம் செய்வதில் பிடிவாதமாக இருந்து அதைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அத்தோடு கடுமையான முதுகு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் விமானம் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை

Wanni_War_IDPs இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழர் மறுவாழ்வுக்கென வழங்கப்படும் நிதி, அவர்களை அழிக்கவே பயன்படுத்தப்படும் : யசூசி அகாஷியிடம் தமிழ் கூட்டமைப்பு ஆட்சேபம்

fily-ap.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது.

ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. தமிழ் இன அழிப்பில் ஈடுபடும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதியை கையளிக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜப்பான் தூதுவர் யசூசி அகாஷியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை -கோவை காவல்துறை

koovai.jpgராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்
 
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன.