ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.
பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன.
Kullan
ஆயுதங்கள் இல்லை என்பதுதான் உண்மை. காரணம் தீவைத்தான் வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கினால் அந்த ஊரே சரி.
மாயா
இங்கே ஒளிப்படக் காட்சி
http://www.youtube.com/watch?v=4BhuX-SMSNw&feature=player_embedded
பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வையும் புலிகள் தகர்த்துவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது. பாவம் பெரியார்.