பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல் – படைத்தரப்பு மறுப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நேற்று (02.05.2009) காலை செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு தரப்பினர் முற்றாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி தாம் வான் தாக்குதல்களையும், கனரக ஆயுத பாவனையையும் மேற்கொள்வதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    புலிகளது பகுதியிலிருந்து வெளியேறிய இரு கன்னியாஸ்திரிகளுக்கு புலிகளது துப்பாக்கிச் சூடு. திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி.

    Reply