கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

27-karuna-fast.jpgகடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 85 வயதாகும் முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து கொண்டு நலம் பெற்றார். முழு அளவில் அவரது உடல் நலம் சரியாகாவிட்டாலும் கூட அவர் தேர்தல் பிரசாரம் செய்வதில் பிடிவாதமாக இருந்து அதைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அத்தோடு கடுமையான முதுகு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • muni
    muni

    இளைப்பாறவேண்டிய வயதில் கட்டாயம் ஓய்வு தேவை. எதற்காக 85 வயதில் அரசியல்? ஏன் இந்த பெரியமனிதர் இப்படி அடம் பிடிக்கிறார். போகும்வரை தேவை நிம்மதி மட்டுமே..திருந்தவே மாட்டார்……

    Reply