எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜனநாயகத்தை வென்றது பணநாயகம்: ஜெயலலிதா

jeyalalitha.gifதமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தனது பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலத்தால் ஜனநாயகத்தை வென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், திமுக முறைகேடாக வென்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தோல்வியால் பாமக துவண்டுவிடாது என்றும், அரசியலில் அது மீண்டும் உத்வேகம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்: இராணுவம்

mili.jpg72  மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது விடுதலை புலிகளின் நடமாட்டம் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் 400×600 சதுர மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கப் படையினர் 140 பேரைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.

மட்டக்களப்பில் முதல்வர்கள் மாநாடு; 48 பிரேரணைகளில் பலவற்றுக்கு தீர்வு

25th-cm-con.jpg மட்டக்களப்பில் நேற்று நடந்த 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டில் 48 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாக ஆறு முதலமைச்சர்களும் நேற்று தெரிவித்தனர். முதலமைச்சர்கள் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. 6 முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் முடிவில் நேற்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்கள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 48 பிரேரணைகளில் பெரும் பாலானவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலானவை நிர்வாகம் சார்ந்தவைகளாகவே இருந்தன. தீர்வு காணப்படாத விடயங்களுக்கு முதலமைச்சர்களின் செயலாளர்கள் பேசித் தீர்வு காண்பார்கள் என்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக இருதரப்பும் பேசி முடிவெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 வது (அடுத்த) முதலமைச்சர்கள் மாநாடு வடமத்திய மாகாண சபையில் இடம் பெறும். முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க மாநாட்டின் தலைவராக இருப்பார். மாநாடு செப்டம்பர் 18 ஆம் திகதி வட மத்திய மாகாண சபையில் நடைபெறும். மாகாண சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு நேற்றைய மகாநாட்டில் கலந்து கொண்ட திறைசேரி உட்பட சகல திணைக்கள அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர்கள் சான்விஜய டி சில்வா, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய ஆறு முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இம் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு முதலமைச்சர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதலமைச்சர்கள் மாநகர வளாகத்தைச் சென்ற டைந்ததும் அவர்களால் தேசியக் கொடிகளும் மாகாணக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. தேசியக் கொடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கிழக்கு மாகாணக் கொடியை பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கமும் ஏனைய மாகாணக் கொடிகளை ஏனைய முதலமைச்சர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரி மாணவிகளால் தேசிய கீதமும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளால் தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு வேண்டுகோள்

wdj-senavi.jpgநீர் மின்உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதல் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 6.30 முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப் பகுதியில் நாட்டின் நாளாந்த மின் பாவனை 28 மில்லியன் அலகுகளாகும். இந்த அளவை 22 மில்லியனாக குறைத்துக்கொள்ள முடியுமாயின் தற்போதைய மின்உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் சீரான மழை வீழ்ச்சி கிட்டும் வரை மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

இன்று மே 17 சந்திப்பு : வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். : த ஜெயபாலன்

IDP_Campsமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Wanni IDPs : Their needs & Future

Meeting & Discussion

 17th of May 2009, Sunday, 4:30pm
 
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.

Futrher Information :

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
 
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பாஜக

arun_jetly.jpg
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
 
”சில இடங்களில் எங்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களையே பெற்றுள்ளோம். எனினும், இதனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் அருண் ஜேட்லி.

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்

mahinda.jpg26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.

ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.