![]()
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
”சில இடங்களில் எங்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களையே பெற்றுள்ளோம். எனினும், இதனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.
எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் அருண் ஜேட்லி.
kosompo
ஏற்காமல் என்ன செய்ய முடியும்? ஏற்றுத்தானே ஆகவேண்டும். ஆட்சியில் இருந்தாலாவது காசடித்து காது கொடுத்து வோட்டு வாங்கியிருக்கலாம். இனி கஸ்டம்தான்