எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு “சிங்கள பாரம்பரியமே’ அடிப்படைக் காரணம்

06srilanks_chief_judge.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களை தனித் தனியே பிரிப்பதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியதற்கு காரணம், மாகாணங்களின் சிங்கள பாரம்பரியத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாலேயே என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் பிராந்தியத்தில் இருந்த சிங்கள பாரம்பரியத்தை கவனமாக ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் வட, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து 2006 இல் வட, கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் தனித்தனியே பிரிப்பதற்கு தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய அரசியற் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் சோமாவதி மற்றும் சேருவில போன்ற பௌத்தமத இடங்களை அபிவிருத்தி செய்வதில் சிங்கள மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்புபட்டிருந்தனர் என்று சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதவிக் காலத்தை பூர்த்திசெய்துள்ள சரத் என் சில்வா இந்தக் கருத்தை தெரிவித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பல கட்டிடங்களை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக திறந்துவைத்துள்ளார். சனிக்கிழமை சேருவில விகாரையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்; சரத் என். சில்வாவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தசாப்த காலங்களாக நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டார். குழப்பமான தருணங்களில் எல்லாம் பிரதம நீதியரசர், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். சிறைச்சாலையில் இருந்து தனது தாயாரின் இறுதிக் கிரியைக்கு அச்சமயம் இளம் அரசியல்வாதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை அச்சமயம், அரசு சட்டவாதியாக இருந்த சரத் என். சில்வா ஏற்படுத்திக் கொடுத்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரத்தைப் பகிர ஐ.தே.க. ஆதரவளிக்கும் : அமைச்சர் ராஜித நம்பிக்கை

rajetha.gif“அரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கும், அதன் பின்னர் அதற்கு அப்பால் சென்று அதிகாரத்தைப் பகிரவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. செனட் சபை ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்றும் நம்புகிறோம்” என பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை தயாரித்துவிட்டது. இறுதி ஆவணம் எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரெரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழுவின் இணைப்பாளர் என்ற வகையில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:  தற்போது அரசியலமைப்பில் ஓர் அங்கமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராந்து வருகின்றோம். அது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் நானும் அங்கத்துவம் வகிக்கின்றேன். தற்போது நாங்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளோம். இறுதி ஆவணம் என்னிடம் உள்ளது. அதனை தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம். முக்கியமாக 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக சில அதிகாரங்களை வழங்க வேண்டியுள்ளது. அதாவது தேசிய வைத்தியசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால் போதனா வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்துக்கு கீழேயே இருக்கும். அதுபோன்று தேசிய பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளோம். அதாவது குறைந்த அளவிலான அதிகாரம் கொண்ட பொலிஸ் விடயதானம் வழங்கப்படும். மாகாண சபையிலிருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். ஆனால் அவர் முதலமைச்சருக்கு கீழேயே செயற்படுவார். அவ்வாறு காணி அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.

இவற்றை நடைமுறைப்படுத்துவது சவாலான விடயமல்ல. காரணம் இவை அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்று செனட் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அதில் மாகாணத்துக்கு 4 பிரதிநிதிகள் வீதம் ஒன்பது மாகாணங்களிலும் 36 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆனால் இதனைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையாகும். ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவின் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

dengu_1.gifஇவ்வருட ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் 8087 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

மே மாதத்தில் மடடும் 3937 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த நோயால்  பீடிக்கப்பட்டவர்களினதும்  உயிரிழந்தவர்களினதும் எண்ணிக்கை  கடந்த மே மாதத்திலேயே அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைசசு தெரிவிக்கின்றது.

கண்டி,  கொழும்பு,  களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை,  மட்டக்களப்பு,  ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெப்டன் அலி கப்பல் நேற்று விடுவிப்பு

vanangaaman-captainali.jpgஇலங் கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்ததன் காரணமாக கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த இக்கப்பல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணைகளையடுத்து இக்கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  நேற்று வத்தளைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  இக்கப்பலில் இருந்த பொருட்கள் எதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததோடு இக்கப்பலை இலங்கையின் எந்தத் துறைமுகங்களுக்கும் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுமில்லை.

நேற்று விடுவிக்கப்பட்ட இக்கப்பல் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் வரை கடற்படை வீரர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ருவன்டி-20’ கிரிக்கட் தொடரில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி – தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றம்

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. இத்தொடரில் நேற்று தனது முதலாவது போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேவேளை, தனது முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியதீவுகளிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி நேற்று இலங்கையிடமும் தோல்வியடைந்தததால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

160 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதுதவிர ஜெஹான் முபாரக் 11 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 சிகஸர்கள் மற்றும் ஒரு 4 ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் புதிய கப்டனாக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை அணி பங்கேற்ற நேற்றைய முதலாவது போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று பதவிப் பிரமாணம்

parliament.jpgபாராளு மன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று (09) சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றனர். மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நந்திமித்ர ஏக்கநாயக்கவும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்திம வீரக்கொடியும் பதவி ஏற்க உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் டபிள்யு. பி. டி. தசநாயக்க கூறினார்.

மாத்தளை மாவட்ட ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிஹார மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஐ. தே. க. பட்டியலில் அடுத்து தெரிவாகியிருந்த நந்திமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டார். நீதி, சட்ட மறுசீர மைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் வெற்றிடத்துக்கு காலி மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து தெரிவான அரச ஈட்டு முதலீட்டு வங்கித் தலைவர் சட்டத்தரணி சந்திம வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (09) கூடியதும் முதல் நிகழ்வாக இரு எம்.பிக்களும் பதவி ஏற்கும் வைபவம் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் கூறினார்.

யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் இறந்ததால் ஏற்பட்ட வெற்றிட த்துக்கு எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. புதிய உறுப்பினரின் பெயரை தமிழரசுக் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை என தசநாயக்க குறிப்பிட்டார்

யாழ்.முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 213 பேர் உறவினர்களுடன் தங்கி வாழ அனுமதி

civiling_fleeng3.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 111 குடும்பங்களைச் சேர்ந்த 227 அங்கத்தவர்கள் சனிக்கிழமை ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 60 வயதுக்கும் மேற்பட்ட 213 பேர் அவர்களின் உறவினர்களுடன் தங்கி வாழுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பித்தவர்கள் பொறுப்பேற்க நலன்புரிநிலையங்களுக்கு வருமாறு யாழ்.அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களுக்கு வருகைதரும்போது தமது ஆள் அடையாள அட்டை, கிராமசேவை அலுவலரிடம் வதிவிடத்தை உறுதிப்படுத்திய கடிதம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களது உறவினர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களிற்கு நேரடியாகச் சென்று பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்து ஏற்பாடுகளை அவரவரே செய்துகொள்ளல் வேண்டும். எனினும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாவட்டச்செயலக புனர்வாழ்வுக்கிளையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள வயோதிபர்களின் விபரம்: நலன்புரிநிலையம்:கோப்பாய் 1. சிவகுரு இலட்சுமிப்பிள்ளை 366971050V 2. முத்தையா இராசம்மா 346872101V 3. ஆழ்வாப்பிள்ளை யோகேஸ்வரன் 483635087V 4. சின்னத்தம்பி தம்பையா 483218035V 5. தம்பையா பார்வதம் 60 வயது 6. சின்னத்தம்பி இராசமணி 488520040V 7. முருகுப்பிள்ளை புஸ்பவதி பிறப்பு 1941 நலன்புரிநிலையம்:மிருசுவில் (RCTMS) 1. துரைராசா மேரிறோஸ் 458272522V 2. யோகலிங்கம் பெனடிக்ற் 1945.10.20 3. சின்னையா நல்லையா 470631040V 4. கிருஷ்ணபிள்ளை இராசமணி 446880519V 5. முத்துராஜா வரோனிக்கம்மா 427790320V 6. சிவசாமித்துரை இராசம்மா 457030207V 7. இளையதம்பி கணபதிப்பிள்ளை 450593176V 8. கணபதிப்பிள்ளை தவமணிதேவி 486971786V 9. இராமுப்பிள்ளை கிஷ்ணமூர்த்தி 411880559v 10. சூசைப்பிள்ளை மரியதாஸ் 352282022v 11. மரியதாஸ் மேரி பெனடிக்கம்மா 406741869X 12. இராசையா குணரட்ணம் 362480884V 13. கறுப்பையா பூமணி 448222349V 14. சுவக்கீன் செபமாலை 280500704V 15. செல்லையா வேலுப்பிள்ளை 460510120V 16. பெனடிற் பிரான்சிஸ் 462890230V 17. குணரட்ணம் செல்லம்மா 446282476V 18. இராசையா பொன்னையா 416270031V நலன்புரிநிலையம்:கொடிகாமம் (GTMS) 1. இராசேந்திரம் மனோன்மணி 457270640V 2. குருசுமுத்து ஞானமுத்து 461944132V 3. கறுப்பன் மாரிமுத்து 423552530X 4. செல்லத்துரை சிவக்கொழுந்து 1927.08.04 5. பொன்னுத்துரை அஞ்சலாதேவி 1949.01.01 6. தங்கராஜா ராஜலக்ஸ்மி 496625137V 7. சின்னையா நாகதம்பி 412251016V நலன்புரிநிலையம்:கைதடி சிறுவர் இல்லம் 1. பேதுறுப்பிள்ளை இராசப்பு 412250091V 2. காளியன் மணியம் 480253183V நலன்புரிநிலையம்:பல்கலைக்கழக விடுதி,கைதடி 1.செல்லன் செல்லத்துரை 1946.03.03 2. செல்லத்துரை கனகமணி 477691684V 3. வலோரி அன்ரன் 493101358V 4. நல்லையா அந்தோனிப்பிள்ளை 470851430V 5. வல்லிபுரம் முத்துக்குமாரு 1939.01.01 6. அருளப்பு பிலிமினியம்மா 358401368V 7. அந்தோனி பிலிப்பையா 341560284V 8. பிலிப்பையா ஞானசிகாமணி 466270164V 9. செபஸ்தியாம்பிள்ளை பிலிப் 400622680V 10. புஷ்பராசா ஜெயராணி 496063864 V 11. கனகன் செல்லத்துரை 1949.01.01 12. அருளம்மா சந்தியா 355321118V 13. முத்துக்குமார் சிவராசா 461360416V 14. கந்தையா ஜோர்ஜ் நவரட்ணம் 442052913V நலன்புரிநிலையம்: PRI, கைதடி 1. பொன்னுத்துரை ருக்மணியம்மா 1929.01.01 2. சின்னையா நவரட்ணம் 1947.11.09 3. நவரட்ணம் அக்னேசம்மா 496350286V 4. பூசைப்பிள்ளை அக்னேஷ் 366120300V 5. வேலன் ஞானபதி 1944.01.01 6. அந்தோனிப்பிள்ளை அன்னம்மா 1942.12.09 7. அலேசிப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை 1937.12.20 8. கபிரியாப்பிள்ளை (ஊ)போலினா 1934.01.01 9. கதிரவேலு பகவதியம்மா 1949.02.24 10. சூசைப்பிள்ளை அருளானந்தம் 1949.04.05 11. ஆரோக்கிய நாதர் செபஸ்தியாம்பிள்ளை 491314303ங 12. சுந்தரமூர்த்தி சிறிஸ்கந்தராஜா 1948.07.07 13. முத்துக்குமார் சிவராஜா 461360416V 14. பிலிப் சாந்தி யோகு 1935.01.01 15. சூசைப்பிள்ளை அமிர்தநாயகம் 401650229V 16. கந்தையா வரசுந்தரம் 1947.02.03 17. மருதலிங்கம் மதியாபரணம் 1949.04.17 18. நாகையா செல்லையா 472062840V 19. செல்லையா இராஜேஸ்வரி 493872231V 20. மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை 492681962V 21. ஜோன் சூசையம்மா 1949.01.01 நலன்புரிநிலையம்: சாவகச்சேரி மகளிர் கல்லூரி 1. சரஸ்வதி குமரேசன் 305040363V 2. வைரமுத்து தேவசிகாமணி 373962930V 3. அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியநாதன் பிறப்பு 1930. 4. ஆரோக்கியநாதன் சிசிலியா 458292132து 5. நடராசா நாகபூரணம் 1934.07.02. 6. முருகேசு விநாயகமூர்த்தி 463162468V 7. ரத்னம் சிதம்பரம் 426593319V 8. மோசஸ் மரியப்பிள்ளை 1948.07.28 9. செல்லையா பொன்னம்மா 1948.09.07 10. அருமைத்துரை இந்திராணி 476452139V 11. வைரமுத்து வீரசிங்கம் 350971750V 12. வீரசிங்கம் கனகாம்பிகை 1938.03.07. 13. அருளப்பு ஆன்றோஸ் 455532442V 14. ஆசீர்வாதம் பிரான்சிஸ் சேவியர் 1943.09.01 15. பிரான்சிஸ் சேவியர் பிலோமின்னம்மா 475483545V 16. செல்வன் தங்கமணி 1948.08.16 17. தம்பித்துரை அந்தோனிப்பிள்ளை 461780555V 18. நடராசா இந்திராதேவி 425760319V 19. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் 463520070V 20. சின்னத்துரை கணபதிப்பிள்ளை 1924.10.25 21. பற்றிக் கசில்டா ஜெயமணி 497135534V 22. வைரவப்பிள்ளை வாரித்தம்பி 461062130V 23. சின்னத்தம்பி கிட்ணபிள்ளை 382121384V 24. கிட்ணபிள்ளை நல்லம்மா 455520088V 25. நாகமுத்து பரமநாதன் 490910171V 26. பொன்னையா அன்னலிங்கம் 1949.04.16 27. செல்வரட்ணம் யோகம்மா 1948.08.07 28. கணபதிப்பிள்ளை சின்னத்துரை 421037282V 29. பாக்கியராசா பாக்கியம் 426940418V 30. நவரட்ணம் அன்னபூரணி 438290141V 31. செபமாலை இரத்தினசிங்கம் 462910169V 32. கார்த்திகேசு மாசிலாமணி 1945.02.03 33. சில்வெஸ்ரர் மருசலின் 312890216V 34. மருசலின் லூர்த்தம்மா 425911392V 35. மனுவேற்பிள்ளை அல்பிரட் 481593999V 36. அல்பிரட் மாணிக்கம்மா 485292012V 37.கதிர்காமமுத்து சண்முகதாசா 451520121V 38. கணபதிப்பிள்ளை விஜயரத்தினம் 490960406V நலன்புரி நிலையம்: நெல்லியடி MMV 1. சிவக்கொழுந்து தங்கவேலு 386800995V 2. சிற்றம்பலம் மனோன்மணி 315380120V 3. சூசைப்பிள்ளை பூபாலசிங்கம் 1938.04.14 4. சின்னையா இராசவீரசிங்கம் 332981064V 5.ஆசீர்வாதம் மேரிமெற்றலிற்றா 455190860V 6. ஆரோக்கியம் செபஸ்தியான் 491382856V 7. தம்பன் நாகமணி 471820360V 8. சிவலிங்கம் அன்னலக்சுமி 456372767V 9. தேவதாஸ் வடிவாம்பாள் 457022824V 10. செல்லையா மன்மதசிங்கம் 421353166V 11. கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் 492003337V 12. சாருப்பு சாகுல்ஹமீத் பிறப்பு 1949 13. சின்னத்தம்பி இராஜதுரை 420410328V 14. இராசமாணிக்கம் எட்டியம்மா 490784381V 15. செல்லையா சபாரட்ணம் 490393129V 16. நாகலிங்கம் மகாலிங்கம் 461900490V 17. சின்னப்பா ஞானப்பிரகாசம் 490852875V 18. அருளப்பு ஜேசுதாஸ் 482823378V 19. நல்லன் லக்ஸ்மி 475611800V 20. ஞானப்பிரகாசம் எய்லொஸ் 492790257V 21. செபரட்ணம் மதுரநாயகம் 471692775V 22. சூசைப்பிள்ளை மாரியம்மா 288340838V 23. கந்தசாமி ஜெயச்சந்திரமூர்த்தி 481112249V 24. போனிம்பஸ் பிரான்சிஸ்கோசேவியர் 452342723V 25. கிளிஸ்ரினம்மா பிரான்சிஸ்கோசேவியர் 497553032V 26. பாவிலுப்பிள்ளை அரியாந்தஸ் 480520250V 27. வடிவேலு அருமைநாயகம் 482712967V 28. வைரமுத்து முத்தையா 383370086 V 29. முத்தையாயோகாம்பிகை 485141162V 30. குருக்குமா வள்ளிநாச்சிப்பிள்ளை 476620562V 31. ஆனந்த மயில் வசந்தகோகிலா 03.06.1939 32. நீக்கிலம் பிள்ளை வேலம்பமாரி 358511120V 33. பத்திநாதன் மேரிலூசியா 06.06.1936 34. பிரகாசம் அந்தோனி குரூஸ் 340100387V 35. நாகராசா பூங்கோதையம்மா 395410300V 36. கந்தசாமி புஸ்பலீலா 456272452V 37. சண்முகரட்ணம் காந்தமலர் 17.06.1947 38. செல்வராசா மாமலர் 485962220V 39. வேலுப்பிள்ளை மாமயில் 27.04.1927 40. சுவாமிப்பிள்ளை செபஸ்தியாம் பிள்ளை 23.06.1946 41. பிரான்சிஸ் ஜேசுதாஸ் 25.03.1949 42.தேவசகாயம் பிரான்சிஸ் 472810314V 43.பிரான்சிஸ் செபமாலை நாயகி 476640660V 44. பெர்னாந்து இராஜரட்ணம் 397550087V 45. சின்னத்துரை செல்லபாக்கியம் 387540091V 46. இராசையா மார்க்கண்டு 490784381V நலன்புரி நிலையம்: கொடிகாமம் இராமாவில் 1. இராசையா இராசரத்தினம் 480580257V 2. சீமாம்பிள்ளை கிறிஸ்துராசா 471014052V 3. கிறிஸ்துராசா பிரான்சிஸ்கா 476923549V 4. நமசிவாயம் தர்மலிங்கம் 322751800V 5. சிவானந்தம் சந்திரா 1949.04.14 6. வேலுப்பிள்ளை பாலசிங்கம் 1947.07.07 7. சிதம்பரப்பிள்ளை புஷ்பமணி 476853575V 8. குருசுமுத்து மாரியாய் 1919.06.16 9. ஜோசேப் மரியாம்பிள்ளை 1938.02.13 10. மரியாம்பிள்ளை அன்னம்மா 405362996V 11. நாராயணசாமி நந்தகோபாலசாமி 400951144V 12. கதர்முத்து தங்கவடிவேல் 1938.08.07 13. தங்கவடிவேல் புஷ்பவதி 1948.04.30 14. நாகலிங்கம் நவரத்தினமலை 1942.03.05 15. கஸ்பர் அந்தோனியம்மா 1944.12.23 16. தர்மலிங்கம் செல்லம்மா 1933.10.05 17. நல்லையா தங்கமுத்து 306100840V 18.இராசதுரை இலங்காதேவி 425551612V 19. செல்லத்துரை அருளப்பு 1947.10.01 20. நடராசா சத்தியமூர்த்தி 1947.07.04 21. இராயப்பு அந்தோனிப்பிள்ளை 357252075V 22. மானன்ரகி முத்தையா 1947.07.04 23. பிலியாகோப் ஆரோக்கியமலர் 1940.04.05 24.வேலையன் சண்முகம் 373541192X 25.மரியநாயகம் செபமாலை 436811560V 26. சிதம்பரநாதன் செல்லம்மா 1944.05.24 27. இராசசுந்தரம் சின்னக்கிளி 477004040V 28. அந்தோனி முத்து எலிசபெத் 1935.04.08 29. பொன்னம்பலம் நல்லையா 442402213 V 30. செபமாலை ஆபிரகாம் 223030220V 31. சிங்கராசா அல்பிரட் 1927.10.10 32. சூசைப்பிள்ளை எட்வின் ராஜா 451382349V 33 இராஜப்பு செபமாலை 362812143V 34. வேதநாயகம் செபஸ்ரியம்மா 1945.05.03 35. எட்வின்ராஜா ஜெறினம்மா 468592240V 36. கிறிஸ்தோபர் மாக்கிரட் 1927.11.11 37. கிறிஸ்தோபர் சறோசாமலர் 1949.08.30 38. பில்லியக்குட்டி தவமணி 1947.09.22 39. அப்புலிங்கம் தண்டபாணி 1944.09.14 40. மாணிக்கராசா சிவபாக்கியம் 416041580V 41. ரோனம் தரிசில்டா ஜெனசதா கிறிஸ்தோபர் 427800237V 42. சந்தனப்பிள்ளை பத்திநாதன் 449841694V 43. இராமலிங்கம் செல்லபாக்கியம் 326704849V 44. சுப்பிரமணியம் துரைராசா 1949.04.08 45. சந்திரன் தேவராணி 1949.04.26 46. இராசையா செல்லத்தம்பி 361810120V 47. செல்லத்தம்பி இராசலக்ஸ்மி 495183084V 48. செபமாலை செபஸ்தியாம்பிள்ளை 1940.01.01 49. சுப்பையா சின்னதம்பி 1947.05.07 50. நடேசன் பாலு 1947.05.22 51. அந்தோனிப்பிள்ளை எட்வேட் 1945.10.13 52. எட்வேட் மரியமலர் 1946.11.25 53. மதியாஸ் மாக்கிரட் 1942.05.22 54. விசேந்தி கிறிஸ்தோபர் 473471710V 55.பொன்னையா அருளம்பலம் 420082282V 56. சீனியர் ஆறுமுகம் 490892940V நலன்புரி நிலையம்: சிறுவர் இல்லம், கைதடி (கணவனும் மனைவியும்) 01. தோமஸ் அருளானந்தம் 482790348V 02. அருளானந்தம் பற்றிமா புஸ்பராணி 546673588 நலன்புரி நிலையம்: சாவகச்சேரி, மகளிர் கல்லூரி 01. இராசையா கந்தசாமி 1947.12.10 02. கந்தசாமி இராசாத்தியம்மா 1954.02.11

யாழ். மாநகர, வவுனியா நகரசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா?

sri-lanka-provincial-council.jpgயாழ். மாநகர, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை இடம்பெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த இரு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதா? குறித்து இன்னமும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலையில் பாரிய உயிர், உடைமை அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையிலும் தற்போது தேர்தல் நடத்துவது குறித்து அதிருப்தி அடைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தேர்தல்களை ஒத்திவைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். சொல்லொணாத் துன்பத்தில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய பின்பே தேர்தல் நடத்துவது “ஜனநாயகம்’ என்று அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளனர். அவர்கள் போருக்குப் பின்னரான நிலைவரம் தொடர்பாக இந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 9 ஆம் திகதியே டில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதன் பின்னரே யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் ஒன்று கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று குறிப்பிட்ட அந்த உறுப்பினர், தேர்தலைப் பிற்போடுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில் போட்டியிடும் நிலைமையேற்படலாம் என்று கூறினார்.

இதேவேளை, யாழ்.மாநகர, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக தமிழக பத்திரிகையொன்றில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இரா.சம்பந்தனின் புகைப்படத்துடன் இச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாயினும் மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

முசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீள்குடியேற்றம் – 551 குடும்பங்கள் மீள்குடியேற்றம்; பசில் எம்.பி.தலைமை

basil.jpg‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கான இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெறுகின்றது.

ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட 551 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற வைபவத்தில் வட மாகாணத்துக்கான விசேட செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. பிரதம அதிதியாகவும் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் ஆலோசனைக்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத பிடியிலிருந்து நாட்டை படை வீரர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்ததன் மூலமே இடம்பெயர்ந்த இந்த மக்களை வெகுவிரைவில் மீள்குடியமர்த்த கிடைத்தது.

மன்னார், முசலி, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டாரவெளி, கடலான்குளம், சின்னபுலச்சி, பொட்கேணி, அரிப்பு மேற்கு மற்றும் அரிப்பு கிழக்கு ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இன்று மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

பொலிஸ் நிலையம், பாடசாலை திறக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையிலேயே இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். அத்துடன் இந்த மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறையைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளுமே இங்கு அதிகமாக உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றப்படுவதுடன் இந்த மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களும், மீன்பிடி வலைகளும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. கூட்டுறவு கடைகள், தபாலகம், மருந்து நிலையம், போக்குவரத்து வசதிகள் இன்றைய தினம் செய்து கொடுக்கப் படவுள்ளது. இதேவேளை அண்மையில் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள மெனிக்பாம் மற்றும் பல்வேறு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதைக்கப் பட்டுள்ள கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் முசலி மக்களை போன்று அந்த மக்களும் வெகு விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர்.எனவேதான் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதை கண்காணிக்கும் பொருட்டு விசேட பிரிவு ஒன்றும் நிறுவப் பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பசில் ராஜபக்ஷ எம். பி. இதற்கான சகல நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு

ஐரோப் பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு 43 சதவீதமாக அமைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரடித் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து மிகக் குறைவான வாக்களிப்பு இந்த முறைதான். வாக்காளர்கள் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், வாக்களித்துள்ளவர்களும் கூட பெரும்பங்கில் தேசிய அரசியல் காரணங்களை முன்னிட்டே வாக்களித்துள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரையில், ஆளும் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மோசமான முடிவு, பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வாரம் அமைச்சர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், கோர்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கிவருகின்றன. இளநிலை அமைச்சரான ஜேன் கென்னடி அரசாங்கத்தில் இருந்து கடைசியாக விலகியிருக்கிறார்.