கெப்டன் அலி கப்பல் நேற்று விடுவிப்பு

vanangaaman-captainali.jpgஇலங் கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்ததன் காரணமாக கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த இக்கப்பல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணைகளையடுத்து இக்கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  நேற்று வத்தளைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  இக்கப்பலில் இருந்த பொருட்கள் எதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததோடு இக்கப்பலை இலங்கையின் எந்தத் துறைமுகங்களுக்கும் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுமில்லை.

நேற்று விடுவிக்கப்பட்ட இக்கப்பல் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் வரை கடற்படை வீரர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகம். வணங்காமண் = வாயிலமண்

    இதை சிறீலங்கா அரசு ஏற்றிருந்தால் அல்லது அதிலுள்ள பொருட்களை எடுத்து வினியோகித்திருந்தால் இதை சாட்டாக வைத்தே புலத்தில் கொள்ளை அடிப்பது மீண்டும் தொடர்ந்திருக்கும். அது தடுக்கப்பட்டிருக்கிறது. மோட சிங்களவன் இப்போது மோட்டுத் தமிழன் என்றே சொல்கிறான்.

    30 வருடமாக புலிகளது நிகழ்ச்சிகளுக்கு ஒலியமைத்த ஒருவர் சொன்னார். இனி எனது தொழில் நடக்காது. எங்கள் நிகழ்ச்சிகளை நம்பி அதிகமாக முதலீடு செய்துவிட்டேன். உங்களுக்கு ஏதாவது நிகழ்ச்சி வந்தால் சொல்லுங்கள் என்றார். உங்களை மாதிரி 30 வருடமாக பல திறமைசாலிகள் உங்களால் வளர முடியாமல் தடுக்கப்பட்டனர் என்பதை அறிவீர்களா?

    Reply
  • thurai
    thurai

    தலைவரின் இறப்பை நம்பமுடியாமல் தடுமாறும் புலியின் ஆதரவாளர்கள், தற்போது கப்பலில் ஏற்றிய உணவை இறக்கும் இடம் தெரியாமல் அலைகிறார்கள்.

    ஈழத் தமிழர்களை நடுக்கடலில் தவிக்கவிட்டவர்கள் புலிகள் என்பதை ஏற்க மறுப்பவர்களிற்கு, வணங்காமண் பாடம் புகட்டுமா?

    துரை

    Reply