இவ்வருட ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் 8087 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
மே மாதத்தில் மடடும் 3937 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களினதும் உயிரிழந்தவர்களினதும் எண்ணிக்கை கடந்த மே மாதத்திலேயே அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைசசு தெரிவிக்கின்றது.
கண்டி, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.