எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜஸ்வந்த் நீக்கப்பட்ட விதம் தவறு – பரூக் அப்துல்லா

farooq1111.jpgபாஜக விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் சரியல்ல, முறையல்ல என்று மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் மோசமானது. இதுபோன்ற செயல் யாராக இருந்தாலும் பாதிக்கத்தான் செய்யும்.

ஒரு கட்சிக்காக 30 வருடங்களுக்கும் மேலாக உழைத்த ஒருவரை, மூத்த தலைவரை இப்படி அவமதித்திருக்கக் கூடாது என்றார் அப்துல்லா.

இலங்கை நிலைவரத்தால் ஐ.நா.வுக்கு தாக்கம்

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஐ.நா.வின் மனிதாபிமான உதவி வழங்கும் முறைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகார, அவசர நிவாரண விவகாரத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரும் உதவி செயலாளர் நாயகமுமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். சர்வதேச மனிதாபிமான தினமான நேற்று புதன்கிழமை இந்நிகழ்வை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே ஜோன்ஹோம்ஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

“இலங்கையில் இறுதியாகவும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் துப்பாக்கிகள் ஓய்ந்துவிட்டன. சுமார் 3 இலட்சம் மக்கள் இப்போதும் முகாம்களில் உள்ளனர். சிறிய அளவில் அல்லது நடமாடும் சுதந்திரம் இல்லாமல் அவர்கள் உள்ளனர். தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் சாத்தியத்தை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.

உயிர்வாழ்வதற்காக உதவிகளில் அவர்கள் தங்கியிருக்கின்றனர் என்று ஹோம்ஸ் கூறியுள்ளார்.

உலகில் மனித துன்பங்களுக்கான காரணங்கள் பலமடங்காக அதிகரித்திருக்கின்றன. அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மனிதாபிமானிகள் கண்டறிந்துகொள்வதிலும் பார்க்க வேகமாக இந்தக் காரணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற மோதல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனால், மோதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்மட்டத்தில் உள்ளன. உள்நாட்டுப் பூசல்களை இந்நாட்களில் நாம் அடிக்கடி பார்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இவை பொதுமக்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்துள்ளதை காணமுடிகிறது என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் – 13வது இடத்தில் சோனியா

sonia1111.jpgஉலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்திக்கு 13வது இடமும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சாருக்கு 20வது இடமும் கிடைத்துள்ளது. ஜெர்னி சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பெப்சிகோ நிறுவன தலைமை செயலதிகாரி இந்திரா நூயி 3வது இடத்தைப் பெற்றுள்ளார். பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஷீலா பெர் 2வது இடத்தில் இருக்கிறார்.

யாஹு நிறுவனத்தின் கரோல் பார்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளார். 100 பேர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சோனியா, சந்தாவைத் தவிர மற்றொருவர் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா. இவருக்கு கிடைத்துள்ள இடம் 91.

சோனியா காந்தி கடந்த முறை 21வது இடத்தில் இருந்தார். இந்த முறை கிடுகிடுவென உயர்ந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல கிரண் மஜூம்தார் 99வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு வந்துள்ளார்.கடந்த முறை 59வது இடத்தைப் பிடித்து அனைவரையும் வியக்க வைத்த உ.பி. முதல்வர் மாயாவதிக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.

இப்பட்டியலில் ஹி்லாரி கிளிண்டனுக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் தலைவரான நான்சி பெலோசிக்கு 35வது இடம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவுக்கு கிடைத்துள்ள இடம் 40. ராணி எலிசபெத் 42வது இடத்தில் உள்ளார்.

இவர்கள் தவிர பில் கேட்ஸ் மனைவி மெலின்டா (34), ஓப்ரா வின்பிரே (41), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (78) ஆகியோரும் இப்பட்டியலில் இருக்கிறார்கள்.

ரணில் அவுஸ்திரேலியா பயணம்

ranil0111.jpgசர்வதேச ஜனநாயக சங்கத்தின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளார்.

ஆசிய ஜனநாயக சங்கத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் பதவியையும் வகிக்கின்றார்.

இவ்விஜயத்தின் போது சர்வதேச ஜனநாயக சங்கத் தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான ஜோன் ஹொவாட், ஆசிய ஜனநாயக சங்கச் செயலாளர் புரூஸ் எட்வர்ட் ஆகியோருடனான விசேட சந்திப்புகளில் ஈடுபடவிருப்பதாகவும் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாவணி கழுத்தில் இறுகியதில் 13 வயது சிறுமி மரணம்

அணிந்திருந்த தாவணி கழுத்தில் இறுகியதில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளை அம்பகமுவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் ஜெகநாதன் நந்துஜா (13 வயது) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாவணி அணிந்தபடி இச்சிறுமி நித்திரை செய்துள்ளார். நித்திரையின் போது எதிர்பாராதவிதமாக தாவணி கழுத்தில் இறுகியதில் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமி கண்டி விஹாரமாதேவி கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

t-n-govt-logo.jpgஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி 1967ஆம் ஆண்டின் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ்,  நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை ஆதரித்துப் பேசுதல்,  அத்தகைய இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் படங்கள், கொடிகள்,  இலச்சினைகள் என்பவற்றைப் பொது விளம்பரங்களில் உபயோகித்தல், அவற்றை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பித்தல்,  பிரசுரித்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்களாகும் என குறிபிடப்பட்டுள்ளது.

விடுதலைச் சிருத்தைகள் எனும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளனின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்தே தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் திருமாவளன்,  தமிழர்களுக்கு தனியான தாய்நாடு குறித்து தொடர்ந்தும் பேசி வருவதோடு புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையையும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரண கிராமங்கள் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு இன்று விசேட போஷாக்கு திட்டம்

vaccine.jpgவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி யுள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கு மென இன்று 20ம் திகதியும், நாளை 21ம் திகதியும் விசேட போஷாக்குத் திட்டம் செயற்படுத்தப்படவிருக்கின்றது.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய குடும்ப சுகாதாரப் பணியகம் இத்திட்டத்தை செயற்படுத்தவிருக்கின்றது.

வன்னியிலிருந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலைய ங்களும் 2500 கர்ப்பிணி பெண்களும், 40 ஆயிரம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கியுள்ளனர்.

இவர்களின் போஷாக்கு நிலமையை மேம்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும்,. நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சின்ன முத்து, போலியோ நிர்பீடன மருந்துகளும், வயிற்றுப்புளுக்கான தடுப்பு மருந்துகளும் எற்கனவே பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இவற்றை பெற்றுக் கொடுப்பதில் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த விசேட போஷாக்குத் திட்டத்தை செயற்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தாகவும் அவ்வதிகாரி கூறினார்.

ஆலய உற்சவத்தில் குளவிகள் கொட்டி 80 பேர் ஆஸ்பத்திரியில்

000images.jpgஆலய உற்சவமொன்றின் போது, குளவிகள் கொட்டியதில் 80 பேர் அப்புத்தளை மற்றும் தியத் தலாவை அரசினர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம், அப்புத்தளை தோட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குளவிகள் கொட்டியவர்களில் 20 பிள்ளைகளும், இரு பெண்களும் ஆபத்தான நிலையிலிருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆலய உற்சவத்தின் போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த போது, அடுப்பு புகையினாலேயே குளவிகள் கலைந்து அடியார்களைக் கொட்டியதாக தெரிய வருகின்றது.

திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

botreeஆசிய நாடுகளில் அதிகளவிலான மக்கள் தமது வாழ்வை திருப்திகரமாக வாழுமிடங்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது.  நுகர்வோர் நடவடிக்கை தொடர்பாக ஆசிய பசுபிக் கிறே குழு விளம்பரக் கூட்டு வியாபார சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இலங்கை முன்னிலையில் உள்ளது. 16 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி தாய்வான் 28 சதவீதத்தை மட்டுமே பெற்று இறுதி நிலையிலுள்ளது.

இச்சங்கத்தின் 4 ஆவது வருடத்தில் ஆசிய பசுபிக் நாடுகளிலுள்ள 18 – 65 வயதுக்கிடைப்பட்டவர்கள் 8000 பேரிடம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்னஞ்சல்கள், நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சீனா மற்றும் இலங்கை ஆகியன 94 சதவீதத்தால் அதிகளவில் நம்பிக்கையுடைய மக்கள் வாழும் நாடுகளாக உள்ளன.

ஆனந்தசங்கரியின் வாகனம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் 1 வரை ஒத்திவைப்பு

court222.jpgதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் வாகனத்தை அவரிடம் திருப்பி ஒப்படைக்காது மறுத்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னிப் பிராந்தியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் வி.சகாயதேவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனது வாகனத்தை மோசடி செய்ததாக சகாயதேவன் மீது வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டி வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து சகாயதேவன் வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பெறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை வவுனியா நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராசா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பினரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டதுடன், வி.சகாயதேவன் அதன் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.