பாஜக விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் சரியல்ல, முறையல்ல என்று மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் மோசமானது. இதுபோன்ற செயல் யாராக இருந்தாலும் பாதிக்கத்தான் செய்யும்.
ஒரு கட்சிக்காக 30 வருடங்களுக்கும் மேலாக உழைத்த ஒருவரை, மூத்த தலைவரை இப்படி அவமதித்திருக்கக் கூடாது என்றார் அப்துல்லா.