சர்வதேச ஜனநாயக சங்கத்தின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளார்.
ஆசிய ஜனநாயக சங்கத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் பதவியையும் வகிக்கின்றார்.
இவ்விஜயத்தின் போது சர்வதேச ஜனநாயக சங்கத் தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான ஜோன் ஹொவாட், ஆசிய ஜனநாயக சங்கச் செயலாளர் புரூஸ் எட்வர்ட் ஆகியோருடனான விசேட சந்திப்புகளில் ஈடுபடவிருப்பதாகவும் அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.