எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அமைச்சர் ரிஷாட்டுக்கு உயர் விருது

rizad_baduradeen1.jpgமீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் இளம் அரசியல் தலைவராக அதிஉயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் (09) நிகழ்ந்த விசேட நிகழ்வின்போது ஜூனியர் சேம்பர் இன்ட நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 2009ம் ஆண்டுக்கான சிறந்த இளம் அரசியல் தலைவராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவு செய்து பாராட்டியதுடன் விருதும் வழங்கி கெளரவித்துள்ளது.

முப்படைகளின் தலைமை அதிகாரியும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சரத் பொன் சேகா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில், பல் வேறு துறைகளில் சாதனை படைத்த இளைய தலைமுறையினர் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இளம் வயதில் அமைச்சராகியதுடன் மட்டு மல்லாது மிக இளம் வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது வடமாகாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தின் 59வது வருடாந்த மாநாட்டின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இவ்வாண்டின் சிறந்த ஆளுமைக்கான உயர் விருது வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எருக்கலபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்றதுடன் உயர்தரத்தை கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் பயின்றார். உயர்தரத்தில் விசேட சித்தியைப் பெற்று மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

நோபல் பரிசு பணம் – சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்க ஒபாமா முடிவு

obama.jpg2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோபல் பரிசு வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 10 ந் திகதி ஸ்டாக் ஹோமில் நடக்க உள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்கப்பட்டயம் மற்றும் 7 கோடி ரூபா வழங்கப்படும். நோபல் பரிசை நேரில் சென்று பெற ஒபாமா முடிவு செய்துள்ளார். நோபல் பரிசு பணத்தை சமூக சேவை அமைப்புகளுக்கு தானமாக கொடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளாரென அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து கப்பம் கோரிய கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்

பொலிஸாரென்ற போர்வையில் தொலைபேசியில் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரிய சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து 15 தொலைபேசிகளும் 45 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து, அவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.

“புலிகளின் தற்கொலைப் பிரிவினர், தற்கொலை அங்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலை பேசியிலிருந்து உங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது! எனவே, உங்களைக் கைது செய்ய வேண்டும் இல்லையேல், 10 இலட்சம் ரூபாய் வழங்கினால் சமரசமாய்த் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கப்பம் செலுத்த தயார் என்றதும் சம்பத் வங்கியின் 110353544211 மற்றும் 108053547393 ஆகிய கணக்கு இலக்கங்களிலும், செலான் வங்கியின் 06-0002612541101 என்ற கணக்கிலகத்திற்கும் பணத்தை வைப்பிலிடுமாறு கோரப்பட்டுள்ளது.

மெபிட்டெல் வலையமைப்பின் 0718929261, 0718929214 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பு எடுக்கப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், இவ்வாறு கப்பம் கோரியவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 15 தொலைபேசிகளும், சுட்சுமமான முறையில் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்

திருமலை கோணேசபுரியில் 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு

260909house_new.jpgதிரு கோணமலை, கோணேசபுரி வீடமைப்பு திட்டத்திலுள்ள 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

கோணேசபுரி தமிழ்க் கிராமத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்டவர்களு க்கென ஜப்பான் 300 மில்லியன் நிதி உதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இவ்வீடு களை அமைத்துள்ளது.

வெலிமடை – பதுளை வீதியில் மண் சரிவு: மறு அறிவிப்புவரை மூடப்பட்டது

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் 106வது கட்டையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வீதியில் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாதை சீர்செய்யப்பட்டு போக்குவரத்து இடம் பெற்றுக்கொண்டிருந்தவேளை நேற்று முன்தினம் 106ஆம் கட்டையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி மூடப்பட்டுள்ளதால் வெலிமடையிலிருந்து பதுளை செல்லும் வாகனங்கள்

வெலிமடை, டயரபா, பண்டார வளை, அட்டம்பிட்டி ஊடாக ஹாலி -எல மார்க்கமாக பதுளை செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை, பேரவையை மீண்டும் செயற்படுத்த குறைநிரப்பு பிரேரணை 4.79 மில். ரூபாவுக்கு சமர்ப்பிப்பு

26parliament.jpgஇலங்கை பத்திரிகைப் பேரவையை மீண்டும் செயற்பட வைப்பதற்காக 4.79 மில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற பொது தொழில் முயற்சிகள் செயற்குழுவின் (சேளப்) கட்டளையின் பிரகாரம் இலங்கை பேரவை மீண்டும் செயற்படவிருக்கின்றது.

இதன் உத்தியோகத்தர்களின் சம்பளம், அலுவலகத் தளபாடக் கொள்வனவு, மற்றும் மீண்டெழும் செலவு என்பவற்றுக்காகவே இக்குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் சார்பில் ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சிருமான தினேஷ் குணவர்தன இந்த குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடும் ‘வரட்சி’ இரு ஆதி வாசிகள் மரணம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் றதுகல காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் மரணமடைந்தும், நச்சுக் கிழங்குகளை உண்டதனால் சிலர் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை- பிபிலை பிரதான வீதியில் சுமார் 15 மைல் தொலைவில் றதுகல என்ற காட்டுப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு சுமார் 50 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. சுது வன்னிலத்தோ என்பவர் அக்குடும்பங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அண்மைக் காலமாக மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி றதுகலவையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக பராமரித்து வந்த சிறுசேனைகள் நீரின்றி வரண்டுவிட்டன. அதனால் அவர்கள் வேறு பல காட்டு மரங்களின் கனிகளையும், காய்களையும் சில கிழங்கு வகைகளையும் புசித்துவந்தனராம். கடந்தவாரம் இவ்விதம் உண்ட கிழங்கில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இரு ஆதிவாசிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்க் கைதிகள் விவகாரம்; அமைச்சர் மிலிந்தவுடன் புத்திரசிகாமணி பேச்சு

091009puttirasigamani.jpgசிறைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகப் பிரதியமைச்சர் வி.புத்திர சிகாமணி தெரிவித்தார். கைதி களுக்கு எதிராக வழக்குப் புதிவு செய்வதா, அல்லது விடுதலை செய்வதா என்பதை ஆராய்ந்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழகக் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பின்னர் பிரதியமைச்சர் கவனம் செலுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பல்வேறு சிறைகளிலும் சுமார் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று கோலாகலமாக ஆரம்பம்

இந்த சமய கலாசார பாரம்பரியங்களை உள்ளடக்கியதான மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று 10ம் திகதி வெகு கோலாகல மாக ஆரம்பமானது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்- முஸ்லிம் பாட சாலைகளைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்களும், மற்றும் ஆசிரியர்களும், மாத்தளை மாவட்ட பொதுமக்களும் தொடக்க விழாவில் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாத்தளை நகரெங்கும் வாழை, மா தோரணங்களால் அலங்கரிக்கப்ப ட்ட, மாத்தளை மாநகர வீதியெங் கும், சாஹித்திய விழாவை வாழ்த்தி மும்மொழிகளிலும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

சாஹித்திய விழாவிற்கு மெருகூட்டும் வகையில் மாத்தளை பாக்கியம் மகளிர் தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பொழுது, திருகோணமலையிலிருந்து வருகை தந்திருந்த இனிய இசை முன்னே ஊர்வலத்தில் அணி வகுத்துச் செல்ல, விழாவின் கதாநாயகனான மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் விழா பிரமுகர்களும், தமிழ் இலக்கியக் கர்த்தாக்களும், மற்றும் பொதுமக்களும் அணி வகுத்து சென்றனர்.

வீதிகள் தோறும் பட்டாசுகள் கொளுத்தி பொதுமக்கள் தமது ஆரவாரத்தினை தெரிவித்தனர்.

30 வருடங்களின்; பின்னர் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு! எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில்

260909srilanka.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை விருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளது. உள்ளூராட்சி மாநாடு 2009 என்ற பெயரில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

18ம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு நடைபெறும்.
மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும்.
1. கருத்தரங்குகள்
2. வடமாகாண உள்ளூராட்சி,  மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள்
3. கலாசார நிகழ்வுகள்
4. பரிசுகளும் விருதுகளும் வழங்கல்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,  கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார்; 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக் கவுள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்தும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் செல்லவுள்ளனர்.