சிறைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகப் பிரதியமைச்சர் வி.புத்திர சிகாமணி தெரிவித்தார். கைதி களுக்கு எதிராக வழக்குப் புதிவு செய்வதா, அல்லது விடுதலை செய்வதா என்பதை ஆராய்ந்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழகக் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பின்னர் பிரதியமைச்சர் கவனம் செலுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பல்வேறு சிறைகளிலும் சுமார் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.