வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை விருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளது. உள்ளூராட்சி மாநாடு 2009 என்ற பெயரில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.
18ம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு நடைபெறும்.
மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும்.
1. கருத்தரங்குகள்
2. வடமாகாண உள்ளூராட்சி, மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள்
3. கலாசார நிகழ்வுகள்
4. பரிசுகளும் விருதுகளும் வழங்கல்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார்; 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக் கவுள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்தும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் செல்லவுள்ளனர்.