எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து அரசமைப்பதில் பிரச்சினை இல்லை” – விஜித ஹேரத்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை இணைத்து அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து 11 மாதங்கள் கடந்த நிலையில், இனவாதத்தைத் தோற்கடிக்க மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்துக்கு இது மிகவும் முக்கியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரல்சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் கே.பி.,கருணா ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசு முயற்சிப்பதாக அவர் சாடினார்.

அதேவேளை, ஏப்ரல் 22 இல் பாராளுமன்றம் கூடும் போது ஜெனரல் சரத்பொன்சேகா சமுகமளிப்பாரெனவும் அங்கு தனது கன்னியுரையை ஆற்றுவாரெனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி ஆதரவாளர் சுட்டுக்கொலை

குருநாகல் பரந்தர பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரொருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பிக்கப் வாகனமொன்றில் இவர் வீடுநோக்கி பயணிக்கும் போதே பிக்கப்பின் பின்னாலிருந்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் பிரேத பரிசோதனைகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் ரிதிகம றம்பொடகமவைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் இதேவேளை, குருணாகல் மகாவ பிரதேசசபைத் தலைவர் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலல்ல பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது மகாவ பிரதேசசபைத் தலைவர் எஸ்.எம்.வீ.கே. சேனநாயக்க படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பத்து ரூபா நாணயக்குற்றி வெளியீடு

10rupees.jpgபுதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று (5) வெளியிட்டது. மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது. முதலாவது நாணயக்குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அவசரகால சட்ட நீடிப்பு; பாராளுமன்றம் இன்று கூடுகிறது

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது.

பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியினால் நியமனம் – இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.

தமிழ் மக்கள் உறுதியான செய்தியை ஆட்சியாளருக்கு வழங்க வேண்டும்

Sambanthan_R_TNAதமிழ்க் கூட்டமைப்புபாரிய பேரழிவுக்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதா அல்லது தன்மானத்துடன் கௌரவமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று வாழ்வதா என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானிக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் “வீடு” சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிறு காலை ஆலங்கேணி, ஈச்சந்தீவு கிராமங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சம்பந்தன் பேசினார். ஏப்ரல் 8 பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பலம் வாய்ந்த அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லும் வாய்ப்பு உருவாகி வருகிறது. வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,  யாழ். ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் இதற்கான எழுச்சி,ஆர்வம் அதிகரித்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்திலும் தமிழர் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியை முறியடிக்கவும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பூரணஅங்கீகாரம் பெற்ற பலம்வாய்ந்த அணியாகப் பாராளுமன்றம் செல்வது உறுதியாகி விட்டது என்றும் சம்பந்தன் கூறினார். வெளிவிவகாரம், தேசிய நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அதிகாரங்களை சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயகத்தை நிர்வகிக்கக் கூடியதாக வழங்கப்பட வேண்டும் என்று தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு முதன் முதலாகக் குரல் கொடுத்தார். அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது என்றும் சம்பந்தன் கூறினார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர் பணி ஆரம்பம்; 19பேர் களத்தில்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திரு ப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து 16 பேர் இலங்கை வந்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப் பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்கள் இருவர் வீதம் எட்டுக் குழுக்களாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண் காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சி. எம். ஈ. வி. அமைப்பு இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்திருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, சுமார் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கென 565 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி, பெப்ரல் அமைப்பு 11,000 க்கும் மேற்பட்டோரை உள்ளூர்க் கண்காணிப்பாளராகப் பயன் படுத்தவுள்ளது. அதேநேரம், சீ. எம். ஈ. வி. சுமார் நான்காயிரம் பேரை ஈடுபடுத்தவுள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: – ஆதரவு திரட்ட கட்சிகள் இறுதிநேர பிரயத்தனம்

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பிரதான கட்சிகளின் முக்கிய கூட்டங்கள் பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளன. ஐ. ம. சு. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மித்தெனியவில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தவிர அமைச்சர்கள் தலைமையிலான முக்கிய கூட்டங்களும் பல மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியும் இன்று பலபிரசாரக் கூட்டங்களை நடத்த உள்ளது. ஐ. தே. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மாலை கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடைபெறும். ஜனநாயக தேசிய முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜே. வி. பி. தலைவர்கள், மற்றும் அநோமா பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கம்பஹாவில் நடைபெற உள்ளது. இதேவேளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (6) முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கவுள்ளதோடு 7ஆம் திகதி வாக்குப் பெட்டிகள் எடுக்கச் செல்லப்பட உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வெற்று வாக்குப் பெட்டிகளுக்குள் ‘ஸ்ரிக்கர்’ ஒன்றை ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அவ்வாறு ‘ஸ்ரிக்கர்’ ஒட்ட விரும்பும் பிரதிநிதிகள் தேர்தல் தினம் காலை 6.30 மணிக்கு முன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு கேட்கப்படுகின்றனர். அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சில தொகுதிகளில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவரை உதவியாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதமாற்றம் தொடர்பாக நூல்கள் எழுதிய பெண்ணுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?

பொலிஸார் விசாரணைபௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியமை தொடர்பாக நூல்கள் எழுதியமை தொடர்பாக கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாலினி பெரேரா என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை கடந்தவார இறுதியில் கைதுசெய்திருப்பதாகபொலிஸார் தெரிவித்ததாகவும் ஆயினும், அது தொடர்பாக விபரித்திருக்கவில்லை என்றும் ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்தது.

இஸ்லாமியப் போராளிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.அவர் மீது இன்னமும் முறைப்படி குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யவில்லை. ஏனெனில் பொலிஸார் தற்போதும் விசாரணை நடத்திவருகின்றனர் என்று ஜயக்கொடி கூறியுள்ளார். உணர்வுபூர்வமற்ற வகையில் மத ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும் பாஹ்ரெய்னில் வசிப்பவருமான இந்த நூலாசிரியர் இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்த சமயம் கைதுசெய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தனது நூல்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தபோது அவர் கைதானார். “இருளிலிருந்து வெளிச்சத்துக்கு” “கேள்விகளும் பதில்களும்” என்பனவே அந்த நூல்களாகும். மத சகிப்புணர்வின்மைக்கு எழுத்தாளர் பலியாகியிருப்பதாக மாலினி பெரேராவின் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் கூறியுள்ளார். மத ரீதியான தீவிரவாதிகளுடன் மாலினி பெரேராவுக்கு ஏதாவது தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது உட்பட சகல குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருக்கிறார்.

பிக்குகள் குழு தொடர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்த பௌத்த பிக்குகள் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிக்குமார் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தை பொலிஸார் சனிக்கிழமை இரவு அகற்றிய போதும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதென அவர்கள் தீர்மானித்துள்ளனர். “ஜெனரலை விடுதலை செய்யும் மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த பிக்குமார் குழுவே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது