தமிழ் மக்கள் உறுதியான செய்தியை ஆட்சியாளருக்கு வழங்க வேண்டும்

Sambanthan_R_TNAதமிழ்க் கூட்டமைப்புபாரிய பேரழிவுக்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதா அல்லது தன்மானத்துடன் கௌரவமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று வாழ்வதா என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானிக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் “வீடு” சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிறு காலை ஆலங்கேணி, ஈச்சந்தீவு கிராமங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சம்பந்தன் பேசினார். ஏப்ரல் 8 பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பலம் வாய்ந்த அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லும் வாய்ப்பு உருவாகி வருகிறது. வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,  யாழ். ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் இதற்கான எழுச்சி,ஆர்வம் அதிகரித்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்திலும் தமிழர் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியை முறியடிக்கவும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பூரணஅங்கீகாரம் பெற்ற பலம்வாய்ந்த அணியாகப் பாராளுமன்றம் செல்வது உறுதியாகி விட்டது என்றும் சம்பந்தன் கூறினார். வெளிவிவகாரம், தேசிய நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அதிகாரங்களை சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயகத்தை நிர்வகிக்கக் கூடியதாக வழங்கப்பட வேண்டும் என்று தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு முதன் முதலாகக் குரல் கொடுத்தார். அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது என்றும் சம்பந்தன் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • NANTHA
    NANTHA

    சம்பந்தரே!
    நீங்கள் இவ்வளவு காலமும் “தமிழ்” என்று செய்தது என்ன? நீங்களும் உங்கள் குடும்பங்களும் “வெளிநாடுகளில் ஹாயாக சீவிக்க வழி பண்ணியிருக்கிறீர்கள். இலங்கை அரசின் ராஜரீக கடவுப்பத்திரமும் மாத சம்பளமும்தான் உங்கள் லட்சியம். அதைத் தவிர புலிகள் கொள்ளையடித்த பணத்தில் முதலீடு செய்யப்படுள்ள வியாபாரங்களை வெளிநாடுகளில் கவனிக்க வேண்டும்.

    அதற்காக போகும்பொழுது தமிழர்களுக்கு காதில் பூ சுற்ற “தமிழர் பிரச்சனைகள்” பற்றிப் பேச சம்பந்தன் இந்தியா பயணம் என்றெல்லாம் ஒரு செய்தியை போட்டு விட்டு போய் வந்து என்ன பேசினீர்கள், யாருடன் பேசினீர்கள் என்று இதுவரையில் நீங்கள் சொன்னது கிடையாது.

    “தமிழை” விட்டால் உங்களில் பலருக்கு “பிழைக்க” வழி இல்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘தமிழீழமா’, ‘மானில சுயாட்சியா’ ‘வட்டுக்கோட்டைத்தீர்மானமா’, ஒஸ்லோ பிரகடனமா’ நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் எனச் சொன்னால் எமக்கும் வோடுப்போட வசதியாக இருக்குமல்லவா?

    இப்போதைய நிலமையில் உங்களுக்கு வோட்டுப்போட்டால் சப்ரா பினான்ஸ் கொம்பனியை வங்குரோத்து பண்ணிய செயலுக்கு மக்கள் நன்றி தெரிவித்து சரவணபவானை வெல்லப்பண்ணி இருக்கிறார்கல் என ஆட்சியாளர்களிடம் சொன்னாலும் சொல்லுவியள்!

    Reply
  • Ravi
    Ravi

    சம்பந்தர் 1999க்கு முன்னர் சந்திரிகா அம்மையார் சனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங் சங்கத்திற்கு ஆதரவு அழித்து வந்தார். இக்காலத்தில் தமிழர்க்கு அவலமும் அழிவும் ஏற்பட்டதை ஒருவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. தமிழர் தாயக நிலப்பரப்பு மீது யாழ்குடா மீது வன்னிநிலபரப்பு மீது ஆக்கிரமிப்பு இரானுவ இயந்திரம் முழு வீச்சுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுது சம்பந்தர் குழுவினர் ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டே இருந்தனர். அக் காலத்தில் அவசரகாலச் சட்டங்களுக்கும் பயங்கரவாதச் சட்டங்கழையும் புதுப்பிக்க ஆதரவு வழங்கினார்கள். இன்னும் யுத்தத்திற்கு ஆயுதம் வாங்க நிதி ஒதுக்கிய பட்யட்டுக்கு ஆதரவாக வாக்களித்த பெருமை சம்மந்தருக்கு சார்ந்ததே. மேலும் இலட்சக்கணக்காண மக்கள் வன்னியிலே பசி பட்டனி பலவித நோய்கள் என அரசின் பொருளாதார தடைகளால் உழன்று கொண்டு இருந்த போதும் சம்பந்தர் அரசக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இருந்தார். இவர்களை ஒற்றுமையின் பேரால் இவர்களைத் தெரிவு செய்வது தமிழினத்திற்கு சாபக்கேடே.

    Reply
  • sumi
    sumi

    தமிழ் மக்கள் உறுதியாக வழங்கவேண்டிய செய்தி, இத்தேர்தலில் தமிழ் கூத்தமைப்பை முற்றாக அரசியலிலிருந்து வெளியேற்றுவதேயாகும். அதற்கு அவர்களை முதலில் தோற்கவைக்க வேண்டும். அதுவே சரியான தீர்ப்பாகும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    செல்வநாயகம் காலத்திலிருந்து அதுதானே நடக்கிறது. பாராளுமன்றம் போய் நீங்கள் அந்த மக்களின் “உறுதியான” முடிவுகளுக்கு” என்ன பண்ணினீர்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

    புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதிநிகள் என்றும் சொன்னீங்கள். பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படியும் ஒரு ஞானோதயம் வந்து தமிழர்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டீர்கள். அதுவும் நடந்தது. அந்த வாக்குகளுக்கு என்ன ஆச்சுது?

    நீங்கள் கட்டையிலே போறவரைக்கும் தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அது சாத்தியப்படாது சம்பந்தரே!

    Reply