புதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று (5) வெளியிட்டது. மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது. முதலாவது நாணயக்குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.