::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையின் முக்கிய இரு தலைவர்கள் பலி – பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவுத் தலைவர் அமுதாப் மற்றும் அதன் முன்னாள் தலைவர் கோபித் ஆகிய இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் தாக்குதலில் இவ்விருவரும் கொல்லப்பட்டதை புலிகளின் பிடியிலிருந்து தப்பி நேற்று இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். புலிகளிடம் தற்போது எஞ்சியுள்ள கனிஷ்ட மற்றும் நடுத்தர படைப் பிரிவுகளைச் சேர்ந்தோர் புலிகளின் படைப் பலத்தில் நம்பிக்கையிழந்துள்ளதோடு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கும் தஞ்சம் கோருவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமுதாபின் இடத்துக்கு கோபித் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் உயிரிழப்பு

green-ocean.jpgமுல்லைத் தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama_.jpgபயங்கர வாதத்தைத் தோற்கடித்து பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சேவையைப் பூர்த்தி செய்யும்போது நாட்டின் இறைமை,  ஆட்புள ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தும் அளவுக்கு அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்பட்டன.

இந்தியா,  சீனா, ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்காக நேரடியாகக் குரல் கொடுக்கின்றன. இலங்கையின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் எப்போதும் கூறி வருகின்றன. இலங்கை அதன் நட்புறவு நாடுகளோடு மிகவும் ஒத்துழைப்புடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருதே இதற்குக் காரணமாகும். இதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் லிபியாவுக்குப் பயணமாகவுள்ளார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களுடன் ‘சிட்டி ஒப் டுப்லின்’ முல்லைத்தீவை அடைந்தது

1029 தொன் பொருட்கள் அடங்கிய ‘சிட்டி ஒப் டுப்லின்’ என்ற கப்பல் முல்லைத்தீவைச் சென்றடைந்துள்ளதாகக் கடற்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இக்கப்பலில் மருத்துவ மற்றும் அவசர சுகாதார உடைகள் , கூடாரங்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் கட்டுப்பாட்டில் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armyvictory.gifபுதுக் குடியிருப்புக்கு கிழக்காக அமைந்துள்ள பச்சப்புல்மூடை பிரதேசத்தை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினர் பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்றுப் பிற்பகல் பச்சப்புல்மூடையை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டுவிட்டு இங்கிருந்து தப்பிச்சென்றதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது 19 எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்களையும் 19 ரி-56 ரக துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்துக்கு அரசு தயாரில்லை; மோதல் தவிர்ப்புகளே சாத்தியம்

krambukkela.bmp

புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற் கொள்ள அரசாங்கம் தயார் இல்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவ்வப்போது மோதல் தவிர்ப்புக்களே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. இந்தச் சொற்பிரயோகங்ளின் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாத சில வெளிநாட்டு ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயுதங்களைக் கீழே வைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைதல், அல்லது தங்களின் பிடியிலுள்ள பொதுமக்களை விடுவித்தல் ஆகிய இரு மாற்று வழிகள் மாத்திரம் தற்பொழுது புலிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடை பெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வர சர்வதேச ரீதியில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இராணுவ ரீதியில் புலிகள் 99 சத வீதம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்பொழுது முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதிப்படும் அப்பாவி பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதங்களை கீழே வைக்கும் விடயத்தையும், சரணடைய வைப்பதையும் எமது பாதுகாப்பு படையினர் கவனித்துக் கொள்வார்கள்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பாக தகவல்கள் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் படையினர் உடனடியாக அந்தப் பிரதேசத்தில் மேற் கொள்ளும் தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு, வரும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தற்காலிக மோதல் தவிர்ப்புக்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

நாங்கள் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள் வதன் காரணமாக இதுவரை 62157 பொது மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்: பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
 
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே  திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியாவுக்கு நேற்று வரை 52 ஆயிரம் பேர் இடம்பெயர்வு – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நேற்று வரை 52 ஆயிரத்து 208 பேர் வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,  விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருகை தந்தவர்களுள் ஆகக்கூடிய தொகையாக 23 ஆயிரத்து 606 பேர் கடந்த மார்ச் மாதத்தில் வந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு வருகை தரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அம்மக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி, மின்சாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து வசதிகளையும் தமது அமைச்சு செய்து கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் மரணமடைந்துள்ளார். லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவர் இவர் என்றும் அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்பட நெறிப்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன்,  இலங்கைப் படையினருக்கு எதிரான களத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.