புதுக் குடியிருப்புக்கு கிழக்காக அமைந்துள்ள பச்சப்புல்மூடை பிரதேசத்தை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினர் பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்றுப் பிற்பகல் பச்சப்புல்மூடையை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டுவிட்டு இங்கிருந்து தப்பிச்சென்றதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது 19 எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்களையும் 19 ரி-56 ரக துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.