உயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.
GNANI
muslims i know of kind people and well hospitality custom they have,they been contributing to lanka.what they are doing is great,they bring the hope for country.