ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், அதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சரியான மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்யுள்ளார்.
இந்த நிலையில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.