நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி 

தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி

இலங்கைக்கு உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழு தேவை, அதே நேரத்தில் இலங்கையை ஒரு வானவில் தேசமாக மாற்ற வேண்டும் என்று மத விவகாரங்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்

வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர் சுனில் மேலும் தெரிவிக்கையில், உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழுவை நிறுவுவதில் எனது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கும். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவைப் போல இலங்கையும் ஒருவருக்கொருவரை மற்றையவர் மன்னிக்க வேண்டும். ஏப்ரல் 21 ஆம் திகதி நெருங்கி வருகிறது, அன்று தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி – தென்னாபிரிக்க அரசு எதிர்ப்பு !

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தென்னாப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார்.
இதற்கிடையே, நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனம் ஜனவரி 28-ம் திகதி இந்த ஏலத்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏலம் நடத்துவதை நிறுத்தவேண்டும் என கர்ன்சேஸ் நிறுவனத்தையும், கிறிஸ்டோ பிராண்டையும் அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கலாசார மந்திரி நாதி தெத்வா கூறுகையில், இந்த ஏலம் குறித்து எங்கள் அரசோடு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.