தையிட்டி விகாரை விவகாரம்

தையிட்டி விகாரை விவகாரம்

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்தால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொகக்குவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஏப்ரல் 18இல் தெரிவித்தார்.

நேற்று ஏப்ரல் 17இல் யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ், சிங்களக் கட்சிகள் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து விலத்திக்கொண்டால் அப்பிரச்சினையை தன்னால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 18இல் யாழ் கொக்குவில்லில் பத்திரிகையார் சந்திப்பை ஏற்பாடு செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தாங்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். அச்சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் ஏனைய சிங்களத் தலைவர்கள் போன்ற மோசமான இனவாதியே எனவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

‘வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உள்ளுராட்சி சபைகளிலும் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகச் சந்திப்பில் ஏப்ரல் 18இல் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் ஒரு போதும் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தார். நாட்டில் இனவாதம் மதவாதம் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே என அவர் வலியுறுத்தினார்.

“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

 

அண்மையில் தெல்லிப்பழை பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி ஸ்ரீ பவானந்தராஜா தலமையில் இடம்பெற்ற போது தையிட்டி விகாரை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்ததது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ள தங்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

காணி உரிமையாளரின் கேள்விக்கு பதிலளித்திருந்த எம்பி ஸ்ரீ பவானந்தராஜா இந்த விடயத்தை அகில இலங்கை ரீதியிலேயே தீர்க்க வேண்டும் என்று பின்வருமாறு பதிலழித்தார்.

எம்பி ஸ்ரீ பவானந்தராஜாவின் பதிலால் திருப்தியடையாத காணி உரிமையாளர்கள் எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. முடிந்தால் பௌத்த பிக்குமார் தரப்பிலிருந்து வழக்கைத் தொடருமாறு சவால் விட்டார்கள். இந்த தையிட்டி விகாரை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையற்ற காணி உரிமையாளர்கள் வேறு எந்தப் பிணக்கிற்கும் கூட நீதிமன்றத்தை நாட மாட்டார்களோ என்று அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் அதியுயர் துறையான நீதிமன்றத்தையே புறக்கணிப்பவர்கள் கட்சி அரசியலூடாக அரசாங்கத்தை அமைக்கும் அரசியல்வாதிகள் பிரச்சினைகளைப் தீர்ப்பார்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முட்டாள்த்தனமான வாதம். சகல ஆவணங்களும் இருக்கும் போது காணி உரிமையாளர்கள் இந்தப் பிரச்சனையில் குளிர்காயும் சட்டத்தரணி அரசியல்வாதிகளின் உதவியுடன் நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும்.

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

 

சிங்கள பௌத்த நாட்டில் தையிட்டி திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர, தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது. வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா ? என்று எண்ணத்தோன்றுகிறது. இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளிகை உற்சவம் நடத்தப்படுகிறது . அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழ் தேசிய சட்டத்தரணிகளின் கட்சிகள் தேர்தல் காலங்கள் என்றவுடன் தையிட்டியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் அரசியலாக்கி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23 இல் தையிட்டி விகாரை முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது தெரிந்ததே. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இனவாத அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை விரும்பாத சிங்கள – தமிழ் இனவாத சக்திகள் தங்கள் வாக்கு வங்கிக்காக ஒரு இனக்கலவரத்தையும் சில உயிர்ப்பலிகளையும் எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர்.

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, இந்தப் பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றனர்.

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும். உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்பவிடக் கூடாது. அதனால் அடிப்படையில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதை அனுமதிக்க முடியாது.

விகாரை விவாகரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அப்பிரதேச மக்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் முதலிய தரப்பினர்களுடன் விரைவில் பேசவுள்ளோம். விகாரை கட்டப்பட்டுள்ள காணியை மாத்திரம் தருமாறும், விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, விகாரை விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.