சீமான்

சீமான்

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில்

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில் !

 

மார்ச் முதலாம் திகதி லண்டன் மெய்வழி ஊடகத்தின் சாம் பிரதீபனுக்கு வழங்கிய நேர்காணலில் பாலியல் குற்றவாளியான பெண்களை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானின் வழிநின்று பெரியாரை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகின்றார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறவழி  கூடத் தெரியாதவர் போல் நேர்காணலில் பதிலளிக்கும் சட்டத்தரணி வைஷ்ணவி பெயரளவில் தமிழ் தேசியம் பற்றி கதைத்த போதும் சாதிய ஒடுக்குமுறைக்கு பெண் அடிமைத்தனத்தை மேற்கொள்பவர்களோடு தன்னை இனம்காட்டி வருகின்றார்.

சட்டத்தரணி வைஷ்ணவிக்கு ஒருபடி மேலே சென்று சீமானுக்கு கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று கருக்கலைப்பைப் பற்றியல்ல, புளகாங்கிதம் அடைபவர் சட்டத்தரணி உமாகரன்

பெரியாரைப் பற்றி 2009க்கு முன்பு ஈழத்தமிழர்கள் பேசியிருக்கிறார்களா என்று படுமுட்டாள்தனமாகக் கேள்விகட்கும் அளவுக்குதான் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற சட்டத்தரணி வைஷ்ணவியின் அறிவு இருக்கின்றது. இந்தப் பட்டம்பெறாத சாதராணர்கள் பலருக்கே மிகத் தெரிந்த விடயங்கள் கூட சட்டத்தரணி வைஷ்ணவிக்கு விளங்கவில்லை. 1989 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான கிட்டு ஆரம்பக் கல்வியைத் தாண்டாதவர், ஆனால் சட்டத்தரணி வைஷ்ணவி சட்டத்தரணி உமாகரன் போல் கவர்ச்சிக்காக தமிழ் தேசியத்தை போர்த்திக்கொள்ளாதவர், பெரியாரைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதைக் கேட்கலாம்:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ரகுராமிற்கு ஆதரவாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு எதிராகவும் ஐபிசி யில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தன்னுடைய சொந்த நலன்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் என கலைப்பீடாதிபதி ரகுராம் சித்தரித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் பாணியில் ஒரு ஒலிப்பதிவையும் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இல்லாமல் ஒடுக்குபவர்களின் பக்கம் நிற்கும் இந்த வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியத்தின் புற்றுநோயாகப் பரவி வருகின்றனர்.

ஒரு பெண்ணை ஏழு தடவை கருக்கலைப்புச் செய்ய வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் சிமானின் கருத்துக்களை தலையில் தூக்கிகொண்டாடுகின்றார் சட்டத்தரணி வைஷ்ணவி. மாறாக யாழ் தாவடியில் சீமானுக்கும் அம்பேக்காருக்கும் சிலை எழுப்பப் போவதாகச் சபதம் போட்டுள்ளார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்.

வைஷ்ணவி தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் 2010இற்குப் பின் சீமானிடம் மேய்ந்துவிட்டு பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி உண்ணும் என்பது போல் கருத்துக்களை கக்கி வருகின்றார். மிக மோசமான இனவாதத்தை கக்குகின்றார். பெரியாரை தெலுங்கர் என்கின்றார். பெரியார் தமிழர்களைக் காடையர் என்று கூறிவிட்டார் என்று கதறுகின்றார்.

பிரானிஸில் சுஜூகூல் என்பவரை சிலர் தாக்கியதும் அதனை புலம்பெயர் ஈழத்தமிழ் காடையர்கள் தாக்கினார்கள் என்று எழுதுகின்றோம். குனடா தெருத்திருவிழாவை சிலர் குழப்பிய போது கனடிய ஈழத்தமிழ் காடையர்கள் தெருத் திருவிழாவை குழப்பியதாக எழுதுகின்றோம். 1983ல் நடந்த இனக்கலவரத்தை சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர் என்று எழுதுகின்றோம்.

அதே போல் பெரியார் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள காடைத்தனங்களைக் கண்டு பொங்கியெழுந்தை, பாலியல் லஞ்சம் கேட்கும் கலாநிதிகளுக்கு வக்காளத்து வாங்கும் வைஷ்ணவி கொதிப்பது ஆச்சரியமல்ல.

சட்டத்தரணி வைஷ்ணவியினதும் அவர் போன்ற குறையறிவுடைய சீமானின் கருத்துக்களால் சீக்குப் பிடித்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேர்ணல் கிட்டு மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். கேர்ணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட ஏனைய இயக்கங்களை அழித்ததில் முன்நின்றவர். ஆனால் பிரித்தானியாவிற்கு வந்த பின் அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டதுடன் ஏனைய அமைப்புக்களையும் சந்தித்து உரையாடி நல்லுறவை ஏற்படுத்த முற்பட்டவர். இந்த மாற்றங்களை அவர் தமிழ் நெற்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் காணலாம்.

ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?

ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?

ஈழத்து பெரியாரிஸ்ட், கலகக்காரன், ‘எனக்கு ஒரு கனவு இருக்கின்றது’ எனச்சொல்லும் அருண் சித்தார்த்துடன் ஒரு நேர்காணல்

 

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

 

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை எழுப்புவேன் என அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், யாழ்ப்பாணம் சிவில் அமைப்பின் தலைவரும், மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாள அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த அருண் சித்தார்த், ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும், அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த அருண் சித்தார்த் இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும்இ அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும் எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது. முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள், எனச் சவால் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்குப் பதிலாக சீமானை தங்களின் தேசியத் தலைவராக வரித்துக்கொண்;டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருசாரார் சீமானின் அடிவருடிகளாகவும் கூலிப்படைகளாகவும் மாறி புலம்பெயர்நாடுகளில் அடாவடித் தனங்களில் ஈடுபட்டடு வருகின்றனர். அவ்வாறான அடாவடி நடவடிக்கைகளில் ஒன்றாக லண்டனில் பெரியார் பற்றிய கலந்துரையாடலுக்குள் புகந்த ரவுடிக்கும்பல் வே பிரபாகரனின் பெயரில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு லண்டன் மெற்றோ பொலிட்டன் பொலிஸாரினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

அருண் சித்தார்த்தின் திராவிடத் தலைவர்களின் சிலை எழுப்பும் முயற்சிக்கு தமிழகத்திலிருந்து விஜயம் செய்த இயக்குநர் ராஜ்குமார் தன்னுடைய முழமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா? சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்து

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா?

சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒரு உரையாடல்

திட்டமிட்ட சீமான் என் படம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்கிறார் – ஒற்றைப்பனைமரம் இயக்குனர் புதியவன் இராசையா!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்து கதைக்களத்தை மையமாக கொண்டு புதியவன் இராசையா உருவாகியுள்ள ஒற்றைப்பனை மரம் பலத்த சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் குறித்த படம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்சாட்டுகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் முன்வைப்பதாக குறித்த படத்தின் இயக்குனர் தனது முகநூல் பதிவு ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதன் படி;

நாம் தமிழர் கட்சி எனது திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. மீறி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

சில திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கையைப் பார்த்தபின் தங்கள் திரையரங்குகளிலும் படத்தை திரையிடுமாறு கேட்கிறார்கள்.

எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களிலிலும் திரையரங்க உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

கேரளாவில் இதுவரை பத்து திரையரங்கங்கள் உறுதிசெய்து விட்டன.

என் மண்ணைப் பற்றி, என் மக்களின் வாழ்வியலைப் பற்றி என் அரசியல் சார்ந்து படம் செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும் பார்வையாளர்கள் உரிமை…

அறிக்கையில் சொல்கிறார் , படம் பொய்ப்பிரச்சாரம் செய்கிறதாம் அப்போ இவர் சொல்லிறதெல்லாம்……

விதானையார் இடையில எதுக்கு கெம்பிறார். ” என குறித்த பதிவில் இயக்குனர் புதியவன் இராசையா குறிப்பிட்டுள்ளார்.