சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

 

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் சுவஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக சுவஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த நேற்றையதினம் யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த எம்.பி அர்ச்சுனாவிடம் இது பற்றி ஊடகவியலாளர் கேட்ட போது, சுவஸ்திகா அருள்லிங்கம் விபச்சாரி எனக் குறிப்பிட்டதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், சட்டத்தரணி சுவஸ்திகா தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஓட்டையை தான் பயன்படுத்துகிறேன் பார் என்ற தோரணையில், தான் பெரும் கெட்டித்தனம் செய்வதாக பா உ அர்ச்சனா நடந்துகொள்கின்றார். பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கிளிநொச்சி ரிக்ரொக் பெண்ணான சாளினியை விபச்சாரி என்று அழைத்தார். சாதாரண பெண்ணை அவ்வாறு அழைத்தமைக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு வெளியே சுவாஸ்திகா அருளலிங்கத்தை மீண்டும் மீண்டும் விபச்சாரி என்று சொல்வதற்கு எதிராக என்றாலும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

 

அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருத முடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார். அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.

அரகலயவின் போது பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும், காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் ஊடாக ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை, தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டினார்.