இராமலிங்கம் சந்திரசேகர்

இராமலிங்கம் சந்திரசேகர்

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

கடல் வவளத்தை பாதுகாக்க புதிய பொறிமுறை – அமைச்சர் சந்திரசேகர் !

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம், தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை . உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை , ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர் . இதற்கு பதிலளித்த அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று, அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என்றார்.

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடற்றொழிலாளர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார். உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு என தெரிவித்த அமைச்சர், நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம்.அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என்றார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்திய விவகாரம் பாரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை. இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எமது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் யாருமே பொலிஸ் பாதுகாப்பைக் கோரவில்லை எங்களுக்கு எங்களுடைய மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் இன்னமும் தங்களுக்கு பாதுகாப்பு போதாது என்று கூக்குரலிடுகின்றனர் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என்றார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.