பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து தமிழ் உண்ணாவிரதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் இளையோர் – தமிழ் மாணவர் அமைப்பினரால் நடாத்தப்படும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரதிகள் நேற்று சனிக்கிழமை 11ம் திகதி 2009 இரவு லண்டன் பொலீசாரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை வீதியோரத்தில் தொடர்வதாக தெரியவந்துள்ளது

இத் தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக வெள்ளி மாலை பிபிசி-ஜரிவி என்பனவும் செய்தி வெளியிட்டிருந்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வெளியேறும் போது எமது உறவுகள் உதிர்த்த வாக்கியம் “இவங்கள் புற்தரைக்கு கொடுக்கும் மரியாதை கூட எமக்குக் கொடுக்கின்றாங்களில்லையே”. இது புரிய இவர்களுக்கு இவ்வளவு நாள் எடுத்திருக்கு……

    Reply
  • thevi
    thevi

    அப்ப நேற்றைய மூன்று லட்சத்திற்கும் என்ன மதிப்பு? உயிரைக் கொடுக்க துணிந்தவர்களுக்கே இந்த மரியாதை என்றால் வரிசை விட்டு கொடி பிடித்து கத்தியதற்கு…?

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    will we learning politeness of british people or will disturb their daily life.parliment square is place many tourist like to see but what happening is hungrstrike.
    your problem is not british people probem.they nothing do with.
    they simpley respond to you thats enough.dont keep on pushing them.its became too much.they have their own problems,such as credit crunch.

    Reply
  • nadesh
    nadesh

    இதற்கு முன்பு கேடிஸ் பிரஜை ஒருவர் பல நாட்களாக தனது தவைலரைக் காப்பாற்ற உண்ணாவிதரம் இருந்தார் ஒரு கிழமையின் பின்பு அந்த இடம் துப்பரவு பண்ணப்பட்டுவிட்டது – இந்த நிலைப்பாடுதான் இலங்கைத் தமிழருக்கும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    நாம் அடங்கா தமிழர் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டி(செயலில்) இலங்கை அரசுக்கு சர்வதேசம் மீண்டும் உதவ வழி வகுக்கிறோம். மக்கள் கூடிவிட்டால் போராட்டமாகாது. நாம் வைக்கும் கோரிக்கைகள் நாம் சதிராடும் நாட்டு அரசாவது ஏற்று கொள்ளகூடியதாக இருக்க வேண்டும். உதாரனத்துக்கு நாம் வைத்த கோரிக்கைகள்.

    தமிழரின் ஏக பிரதநிதியாக புலிகளை ஏற்று கொள்ளவேண்டும் (இதை சர்வதேசம் ஏற்க்குமா??)
    புலிகளின் தடையை சர்வதேசம் விலக்க வேண்டும். (இது சட்ட பிரச்சனையல்லவா?? அதுகூட தெரியாதா??)
    வணங்கா மண் கப்பலை ஓட விடு.(இதை விட தமிழர் முட்டள்கள் என்பதுக்கு என்ன இருக்கு)

    Reply
  • watch
    watch

    Partheepan, This was on bbc website on Friday…………….
    http://news.bbc.co.uk/1/hi/uk/7994181.stm

    Mukilvannan,…..You care about BRitish not about Tamils!!……………..

    Reply