புலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.