கப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் பெல்ஜியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இதன்மூலம் பெல்ஜியத்தில் கப்பல் பணியாளர்களாக வேலை செய்வதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.