யாழ். மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை கடும் மழை பெய்துள்ளது. காலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணி வரையான காலப்பகுதியில் 47.8 மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வுநிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவும் அதேவேளை, யாழ். மாவட்டத்திலும் கடும் மழை பெய்திருப்பதாகவும் குடாநாட்டில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழை சிறுதானிய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பெரும் நன்மை பயக்குமென தெரிவிக்கப்படுகிறது.