யாழ். குடாவிற்கான பயணிகள் போக்குவரத்தில் தற் போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவ டிக்கை காரணமாக இலங்கை விமானப் படையினரின் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
தற்போது யாழ். பயணிகள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கையினை அடு த்து இலங்கை விமானப் படை போக்குவரத்து விமா னத்தினூடாகப் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் – கொழும்பு பயணிகள் விமான சேவைக்கு ஒரு வழிக் கட்டணமாக நாலாயிரத்து நானூறு ரூபா (4400/-) அறவிடப்படும் என்பதுடன், ஏனைய செலவுகளைக் கருத்திக்கொண்டு ஐநூறு ரூபா (500/-) கட்டணமுமாக மொத்தம் நாலாயிரத்து தொளாயிரம் ரூபா (4900/-) அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை விமானங்கள் ஊடாக யாழ். – கொழும்பு விமான சேவைப் பதிவுகளை இல. 61 இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு – 5 இல் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சு பணிமனையில் மேற்கொள்ள முடியும். மேலும் 0112-584322 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி கண்காணிப்பில் பொதுமக்களின் போக்குவரத்து நன்மை கருதி மட்டுமே இவ் விமான சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் எதுவித மோசடி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் தமது பிரயாணப் பதிவுகளை எவ்வித மேலதிக செலவுகளுமின்றி பொதுமக்கள் நேரடியாகவே மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படை ஊடான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள இதேவேளை, ஏ-9 தரைப்பாதை பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்படும் வரை சீரானதொரு பயணிகள் கப்பல் சேவையினைக் கடற்படையினரின் அனுசரணையு டன் திருமலை – யாழ்ப்பாணத்திற்கிடையில் ஆரம்பித்து நடாத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
tax
புலிகள் கப்பம் அறவிடுவதாக பீற்றிக்கொள்பவர்களா,
1.தினசரி கொழும்பிலிருந்து ஏ9 வீதியூடாக பயணிக்கும் வான்களில் சிங்கள பொலிசும் இராணுவமும் கொழும்பிலிருந்து தொடங்கி வவுனியா வரை வசூலிக்கும் கப்பம் பற்றி ஒருபோதும் சொன்னதில்லை.
2.இப்போது ஏ9 வீதி திறந்த பின்னரும் கப்பலில் உம் விமானத்திலும் பயணிக்க தேவை என்ன.. இது சேவைக்கான கப்பமா..
3.இப்போது ஏ9 வீதியால் கொண்டு செல்லும்பார ஊர்த்திகளுக்கான 157,000 ரூபா எந்த கணக்கில் போடப்போகிறீர்கள்
இதையே புலி செய்தால் கப்பம், அரசாங்கமும் டக்ளஸ் உம் செய்தால் சேவைவரியா