இலங்கையின் ஆயுர்வேத வைத்திய முறையை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கியுபா போன்ற நாடுகளில் பிரபல்யப்படுத்த அந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார். இந்த அழைப்புக்கள் தோடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் நான்கு இடங்களில் ஆயர்வேத சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூன்றின் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் என அமைச்சின் ஆலோசகர் ஜயசிறி மெண்டிஸ் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான மூலிகைகள் மற்றும் உபகரணங்கள் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை அபுதாபி நகரிலும் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவும் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.