மத்திய மாகாண அரச பாடசாலை களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க இதன்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது .
மத்திய மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளியில் தமது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . தமது பாடசாலை மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வது தொடர்பான சுற்றறிக்கை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவின் வேண்டுகோளுக் கிணங்க மத்திய மாகாண சுல்வி அமைச்சின் செயலாளரினால் வெளி விடப்பட்டுள்ளது . 2023.06.08 – PDE / 2023 / 01 என்ற கொண்ட கற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேநேரம் இலவசமாக மாணவர்களுக்கு மேலதிக நேரங்களில் கற்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போக்கு வடக்கு மாகாண பாடசாலைகளில் இன்னும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதியின் பல பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பிரபல ஆசிரியர்கள் மாணவர்களின் மேலதிக வகுப்புக்காக தங்களுடைய தனியார் கல்விக்கூடங்களுக்கு அழைக்கின்ற போக்கு தொடர்கின்றது. மேலும் தனியார் வகுப்புக்கு குறித்த பாடசாலை ஆசிரியரிடம் செல்லாத மாணவர்கள் இலக்கு வைத்து பாடசாலைகளில் தாக்கப்படுகின்ற சம்பவங்களும் – குறித்த பாடசாலை ஆசிரியரிடம் வகுப்புக்கு வராத மாணவர்களின் புள்ளிகள் குறைக்கப்படுகின்ற சம்பவங்களும் வடக்கின் பல பாடசாலைகளில் அரங்கேறுகின்றன.
இந்த நிலையில் மத்திய மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அங்கு தங்களிடம் கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் பாடம் நடத்தக் கூடாது என்ற சட்டம் வடக்கு தனியார் கல்வி நிலையங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது.