இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ. பிளெக் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகாவை திங்கட்கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது புதுக்குடியிருப்பு மீட்பு மற்றும் வன்னி நிலைமைகள் குறித்து இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கிக்கூறியுள்ளார். அண்மைய இராணுவ வெற்றிகள் மற்றும் விடுதலை புலிகளின் வீழ்ச்சி தொடர்பில் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் பல உயர்மட்ட தலைவர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர்களால் இதற்கு பின்னர் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கியுள்ளார்.
அத்துடன் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருகின்ற சிவிலியன்களை பராமரிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத்தினர் சிறந்த தயார் நிலையில் உள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.