சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு இலங்கைக்கு வழங்கிய பரிந்துரைகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
தற்போது சிறைச்சாலையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நீதி அமைச்சுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 37 பேர், சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.