கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலை அதிபர்களுக்கு விடுத்துள்ள அவசர பணிப்புரையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகைகள் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
திருகோணமலையில் சென் .மேரிஸ் கல்லூரி மாணவியான ஜூட் ரெஜி வர்ஷா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்தே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யு.கே. வீரவர்த்தன இது தொடர்பான சுற்றறிக்கையை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதில்,
“முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பாடசாலை அதிபர்களின் பொறுப்பாகும்.பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் தவிர்ந்த ஏனையவர்கள் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம்.சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் இடம்பெற்றால் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றார்களை அழைத்து அம் மாணவர்களை பாடசாலை முடிந்த பின்பு அழைத்து செல்வது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும் ” என்றும் அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.