பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்தது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (4) அறிவிக்கப் பட்டன.
ஆனால் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுமார் 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். விசாரணை முடிவில் குறித்த மாணவர் களின் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என தீர்மானிக்கப்பட உள்ளது.
இவர்கள் செய்த தவறின் தன்மைகளு க்கேற்ப தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இவர்களுக்கு பரீட்சை எழுத ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதே வேளை வெளிமாவட்ட பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை இன்று (6) பாடசாலைகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.