தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(CWI- Socialist Party)

International Day of Action – Protest at INDIA HOUSE,
Aldwych,
London,
WC2B 4NA –

Wednesday 8 April 4 – 5.30 pm

சோசலிஸ்ட் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • கம்யூனிஸ்ட் கக்கன்
    கம்யூனிஸ்ட் கக்கன்

    “பூர்ஷ்வாக்கள்” என்றால், முதலாளிகள் போல்,பணக்காரர்கள் போல்,நடிக்கும் “மத்திய தர வர்கத்தினர்”. கடன் வாங்கி “ஃபெராரி கார்” ஓட்ட நினைத்து, வட்டியில் மூழ்குபவர்கள். ஏகாதிபத்தியவாதிகள் செய்யும் தவறுகளுக்கு, பல்லை இளித்துக்கொண்டு முன்னால் நின்று உதை வாங்குபவர்கள். புலம்பெயர் இலங்கைத்தமிழ் மத்தியதர வர்கத்தினர், ”இந்திய முதலாளிகளுக்கு எதிராக”, இந்திய தூதரகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யும் அடிப்படை என்ன?. இந்திய முதலாளிகளுக்கு, ”வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களை கண்டுக் கொள்ள தேவையில்லை”- அவர்களின் உற்பத்தி பொருள்களை இவர்கள் வாங்குவதில்லை- அவர்களின் நலன் காக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளை இவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அனிதா பிரதாப், அருந்ததிராய் போன்றோர்களது “ஆர்கோஸத்தை” ஆதிகரிக்கவே இவர்களது “சீர்” உதவுகிறது. இந்திய முதலாளிகளுக்கு, சுரண்டுவதற்கு தமிழ்நாட்டு மத்தியதர வர்கத்தினர் தேவைப் படுகிறார்கள், ஆனால் இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து ஆயுத ரீதியாக இவர்களை எதிர்ப்பதென்பது பயங்கர கேலிக்கூத்தானது, தேவையில்லாதது ஏனென்றால், இது புலம்பெயர் சூழலில் உருவான கருத்தியல், இலங்கையில் இதன் தொடர்ச்சி கிடையாது. இது இலங்கைத் தமிழர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை தமிழகத்தின் கீழ்மட்ட வர்கத்தினரைப் பொருத்தவரை,” ஃபாரினிலிருந்து போனில் பேசுகிறார்கள், அதன் தலைவர்களின் பெயர்களை உலகெங்கும் போடுகிறார்கள், என்ற ரீதியில் ஆர்வக் குரல் கொடுக்கிறார்கள், அவர்களின் ஆர்வம் தீர்ந்த பிறகு முரண்படுவார்கள். இந்திய தூதரங்கத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதை….. இந்த நலனை தவிர்த்து, இலங்கைப் பிரச்சனையுடன் “இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்”, என்ற ரீதியில் தைரியமாக, தொடர்ச்சியாக முன்வைக்க யாராவது முன்வருவார்களா??. தற்போது தலைபோகும் அவசரமான, ”வன்னிப்பிரச்சனைக்கும்”, இலங்கையின் சிங்கள சகோதரர்களின் பிரச்சனைக்கும் தீர்வுகாணும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை “தொடர்பு படுத்தி” கருத்துக்களை முன்வைக்க முடியுமா??.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    SOME OF US ARE LIKE INK AND SOME LIKE PAPER.AND IF IT WERE NOT FOR THE BLACKNESS OF SOME OF US,SOME OF US WOULD BE DUMB;AND IF IT WERE NOT FOR THE WHITENESS OF SOME OF US,SOME OF US WOULD BE BLIND.

    Reply