பெண்ணொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 47 வயதுடைய நபர் ஒருவரை மிஹிந்தலை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
தனது தாயுடன் வசித்து வரும் குறித்த பெண், நேற்றையதினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அந்தசமயம் வீட்டினுள் நுழைந்த பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த நபர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் தாய், மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், பிறிதொரு நபர் வீட்டில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அவசர நோயாளார் காவுவண்டியை வரவழைக்கப்பட்டுள்ளது, பின்னர் அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவும், சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.