கிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் 60 சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. முதலாவது அலுவலகம் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகமாகத் திறக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
பல்லி
60வதிலும் மகிந்தா விலாஸ் என விளம்பரபலகையும் வைக்கலாம். காலை மாலை தவறாமல் விளக்கேற்றலாம். இது அனைத்தும் வன்னியில் பிரபா & பொட்டர் பண்ணிய அட்டகாசத்துக்கு குறைவானதல்ல. அன்று பிரபாகரனின் தளபதி. இன்று மகிந்தாவின் எடுபிடி.
பார்த்திபன்
சுதந்திரக் கட்சி என்ன சரவண பவனோ??, கிழக்கில் 60 இடங்களில் கிளைகள் தொடங்கட்டும் …நடக்கட்டும்…..
பல்லி
இல்லை பார்த்திபன் அதென்ன அவர்களை சைவம் என கணக்கிடுவது,,?? ஆகையால் அதை முனியாண்டி விலாஸாக மாத்தவும். அங்குதான் வெட்டு கொத்துக்கு குறைவிருக்காது.
GNANI
karuna trying to attract his leader attention,another way of saying show off.
பார்த்திபன்
பல்லி; முனியாண்டி விலாஸிற்கு உப்படி பல கிளைகள் இருந்ததாக நான் அறியவில்லை. அதனால்த் தான் சரவண பவனென்றேன். வேண்டுமானால் இவற்றை அசைவ சரவண பவனென்று மாற்றிக் கொள்வோம்.