வவுனியா பாடசாலை வளவுகளில் உள்ள சகல மரங்களினதும் கிளைகளை தறிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மர நிழல்களில் பாடசாலை வகுப்புக்களை நடத்துவது பற்றி கவனமாக இருக்குமாறும் அதிபர்கள் இந்த வியடத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப் பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகா இறம்பைக்குளம் பாடசாலை வளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் மரணமாகி 13 பாடசாலை மாணவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.