சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரெயினிலிருந்து 40 இலங்கையர்கள் சனிக்கிழமை நாடு திரும்பினார்கள். சனிக்கிழமை அதிகாலை விமான மூலம் வந்த இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்ததாகவும், உரிய சம்பளம் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இவர்களில் 21 ஆண்களும், 19 பெண்களும் உள்ளனர். இதேபோல கடந்த 4 ஆம் திகதி 26 பேரும், 18 ஆம் திகதி 12 பேரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.