![]()
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதனைத் திசைத் திருப்புவதற்கு புலிகள் சர்வதேசத்தின் தலையீட்டை நாட்டில் ஏற்படுத்த முற்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சில உலக நாடுகளும் சில சர்வதேச அமைப்புக்குளும் புலிகள் சார்பாகவே குரல் கொடுக்கின்றன. அவை 90 வீதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தும் அதேவேளை பத்து வீதமளவில் மட்டுமே புலிகள் மீது சுமத்துகின்ற. இவ்வாறான தலையீடுகளில் சிக்காமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.
அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அழுத்தம் தேவையில்லை. அதனடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டிலும் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.