அமெரிக்க அலாஸ்கா மாநிலத்திலுள்ள றிடவுட் எரிமலையானது குமுறி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையை வெளித்தள்ள ஆரம்பித்துள்ளது. முதல் தடவையாக ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு குமுறிய இந்த எரிமலை மறுநாள் திங்கட்கிழமை 4 தடவைகள் குமுறியுள்ளது.
இந்நிலையில் எரிமலையிலிருந்து விசிறப்பட்ட சாம்பலானது அலாஸ்கா மாநிலத்தில் மிகப் பெரிய நகரான அன்சொரேஜ் பகுதியில் விழுந்துள்ளது. இந்த சாம்பலால் விமானங்களின் இயந்திரங்கள் பாதிப்படையலாம் என்பதால் அலாஸ்காவுக்கான 19 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம் அன்சொரேஜ் நகரிலுள்ள எலமென்டோர்ப் விமானப் படைத் தளத்திலிருந்து டசின் கணக்கான விமானங்களை இந்த விசிறப்படும் சாம்பலிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு முன் இந்த எரிமலையானது 1989 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான 4 மாத காலப் பகுதியில் குமுறியது.